Home செய்திகள் இந்தியா WeTransfer  பயன்படுத்தத் தடை ?  இந்தியத் தொலைத்தொடர்புத் துறை அறிவிப்பு !

WeTransfer  பயன்படுத்தத் தடை ?  இந்தியத் தொலைத்தொடர்புத் துறை அறிவிப்பு !

521
0
Wetransfer
Share

இந்தியத் தொலைத்தொடர்புத் துறையானது Wetransfer.com என்ற இணையதளத்தை முழுமையாகத் தடை விதித்துள்ளது. இது குறித்து, இந்தியாவில் அந்த இணையச் சேவை வழங்குபவர்களுக்கு தனித்தனியாக மூன்று ஆணையறிகையை அனுப்பியது. அதில் முதல் இரண்டு அறிக்கையில் URL யை மட்டும் தடை செய்ய அறிவுறுத்தியிருந்தது. ஆனால், மூன்றாவது அறிக்கையில் WeTransfer தளத்தையே முழுமையாகத் தடை செய்ய அறிவுறுத்தியுள்ளது.

ஸ்மார்ட் ஹோம்க்கு ஏற்ற பவர்ஃபுல் ரூட்டர் 128 டிவைஸ் வரை இணைக்க முடியுமாம்….

தேசிய நலன் மற்றும் பொதுநலன் பாதுகாப்பினை கருதி இந்த இணையதளத்தைத் தடை செய்வதாகத்  தொலைத்தொடர்புத் துறை கூறியுள்ளது. ஆனாலும், அரசாங்கம் இதனைத் தடை செய்வதற்கான காரணத்தை இன்னும் தெளிவாகத் தெரிவிக்கவில்லை. இது வரை பெரும்பாலான இணையச் சேவை வழங்குபவர்கள் (ISP) தங்கள் வாடிக்கையாளர்கள் இந்த இணையதளத்தைப் பயன்படுத்தத் தடை விதித்துள்ளன.
WetransferWeTransfer என்பது file sharing யை வழங்கும் நெதர்லாந்தைத் தலைமையாகக் கொண்டு  தொடங்கப்பட்ட  இணையதளமாகும். ஒரு மாதத்திற்கு இதனை உலகம் முழுவதும் 50 மில்லியனுக்கும் மேற்பட்டோர் மக்கள்  உபயோகிக்கின்றனர். இதனால் 1.5 பில்லியின் அளவிற்கு மாதந்தோறும் files பகிரப்படுகிறது.
இந்த இணையதளத்தைப் பயன்படுத்தி 2 GB வரை அளவுகொண்ட file களை  அடுத்தவரின் மின்னஞ்சல் முகவரிக்கு நம்மால் எளிதாக அனுப்பிவிட முடியும். கோப்புகளை அனுப்புவதற்காக எந்த ஒரு கட்டணமும்   செலுத்தத் தேவையில்லை. மேலும், 2 GB-க்கு மேல் உள்ள file -களையும் கட்டணம் செலுத்தி அனுப்ப இயலும். இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டிலிருந்தே ஏராளமான IT ஊழியர்கள் பணிபுரிவதால், இதன் பயன்பாடு வெகுவாக அதிகரித்தது.
இப்படி ஏராளமான காரணங்களால் இந்தியாவில் இது மிகவும் பிரபலமடைந்துவிட்டது. ஆனால், இந்தத் தடையினால் இந்தியாவில் பலர் இதைப் பயன்படுத்த முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால், மக்கள் இன்னும் வீட்டிலிருந்தபடியே பணி செய்யும் சூழல்தான் நிலவி வருகிறது.

இனி கீபேட் போன்களிலும் UPI ரீசார்ஜ் ! லாக்டவுனில் அசத்தல் திட்டம் அறிவித்த VODAFONE…

இணையதளங்கள் தடை விதிப்பது என்பது இந்தியாவில் புதிதல்ல. கடந்த 2014ல் கூகுள் டாக்ஸ், ராபிட் சேர் (rapidshare), சென்ட் ஸ்பேஸ் (send space) என 200-க்கும் அதிகமான இணையதளங்கள் டெல்லி உயர் நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டது. தற்போது, ஒரு WeTransfer மூலம் ஏராளமான 18+ படங்களும் பகிரப்படும் வாய்ப்பு உள்ளது என்பதால் தடை விதிக்கப்பட்டிருக்கலாம் என்று ஒரு தரப்பினர் கூறுகின்றனர். இந்த இணையதளம் மூலம் 18+ படங்களைப் பகிர்பவர்கள் பயனாளர்களே  இணையதளம் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னர் தடை செய்யப்பட்ட இணையதளங்களும் 18+ காட்சிகள், வன்முறைக் காட்சிகளைப் பகிர்தல் மற்றும்  திருட்டுத் தனமாகக் கோப்புகளைப் பகிர்தல் ஆகிய காரணங்களால் தான் தடை செய்யப்பட்டன என்பதும்  குறிப்பிடத்தக்கது.

Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here