Home செய்திகள் இந்தியா தமிழகத்தில் அடுத்த 24மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு ! வானிலை ஆய்வு மையம்…

தமிழகத்தில் அடுத்த 24மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு ! வானிலை ஆய்வு மையம்…

561
0
vanilai
Share

தமிழ்நாட்டில் வரும் 24 மணி நேரத்திற்குள் 17 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என  சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அதிக வெப்பச்சலனம் காரணத்தினால்  சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
chennai
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருப்பது :
தமிழகத்தில் அதிக வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, திருப்பூர், திருச்சி, புதுக்கோட்டை, கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான  அல்லது மிதமான மழை மழை பெய்யக்கூடும். இதுவரை மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் என்ற இடத்தில் 8 செமீ வரை மழைப் பதிவாகியுள்ளது.
puviyarasanதென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக தற்போது உருவாகியுள்ளது. இது நாளை புயலாக மாறி வலுவடைந்து மேற்குக் கடற்கரையை ஒட்டி வடக்கு திசையை நோக்கிச் செல்லும். இதனால் தென் கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவும்  மற்றும் கேரள கடலோரப்பகுதிகள் என அனைத்து இடங்களிலும் வரும் 48 மணி நேரத்திற்கு,  மணிக்கு 45 – 55 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்றுடனும்  இடையிடையே மணிக்கு 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
எனவே இதனால் இன்று முதல் ஜுன் 4  வரை மீனவர்கள் அப்பகுதிகளில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறது. சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்ய மழை வாய்ப்பு உள்ளது.
அவர் கூறியது போல் தற்போது தமிழகத்தில் ஏராளமான மாவட்டங்களில் லேசான மற்றும் மிதமான மழை பெய்துள்ளது.

Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here