Home செய்திகள் இந்தியா இனி கீபேட் போன்களிலும் UPI ரீசார்ஜ் ! லாக்டவுனில் அசத்தல் திட்டம் அறிவித்த VODAFONE…

இனி கீபேட் போன்களிலும் UPI ரீசார்ஜ் ! லாக்டவுனில் அசத்தல் திட்டம் அறிவித்த VODAFONE…

455
0
vodafoneidea
Share

கீபேட் பட்டன் போன் வாடிக்கையாளர்கள் எளிதில் ரீசார்ஜ் செய்ய புதிய முறையை அறிமுகப்படுத்தவுள்ளது வோடபோன் ஐடியா, பேடிஎம் உடன் இணைத்துள்ளது. இதை பயன்படுத்த வாடிக்கையாளர்கள் ரீசார்ஜ் கடைக்குச் செல்லவோ இணைய வசதியோ தேவையில்லை.

இந்த புதிய தொழில்நுட்பமானது NPCI-ன் கட்டண சேவையை அடிப்படையாகக் கொண்டது *99 #. இது (Unstructured Supplementary Service Data – USSD) என்ற வரிசையின் கீழ் இயங்குகிறது. இதைப் பயன்படுத்த, கீபேட் போன் வாடிக்கையாளருக்கு UPI ஐடி இருக்க வேண்டும். மேலும் BHIM UPI உடன் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே UPI ஐடி வாடிக்கையாளர்களுக்கு UPI பின் அமைக்க ஒரு வழியையும் பேடிஎம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் அவர்கள் தங்கள் அக்கவுண்ட்டை எளிதில் ரீசார்ஜ் செய்யலாம்.

இந்த புதிய திட்டத்தை வோடபோன் ஐடியா மற்றும் பேடிஎம் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கீபேட் போன் வாடிக்கையாளர்கள் ஊரடங்கு காலம் மட்டுமல்லாமல் , எப்போதுமே வீட்டை விட்டு வெளியேறாமலும், கடைக்கு செல்லாமலும் தங்கள் மொபைல் போன்களை கொண்டே ரீசார்ஜ் செய்யலாம். BHIM UPI உடன் UPI ஐடி பதிவு செய்தவர்கள் USSD குறியீடு என்னனா 991*3# ஐ டயல் செய்வதன் மூலம் இந்த முறையைப் பயன்படுத்த வேண்டும்.

BSNL-ல் அசத்தல் ஆஃபர் ! 365 rs  மட்டுமே…  

UPI ஐடி BHIM UPI உடன் பதிவு செய்த வோடபோன் ஐடியா வாடிக்கையாளர்கள், இந்த வழிமுறையை பின்பற்ற வேண்டும்:

1. USSD குறியீடு என்னனா 991*3 # ஐ டயல் செய்ய வேண்டும்.

2. அதன் பிறகு, அந்த மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள வோடபோன் ஐடியா சந்தாதாரரின் வங்கிக் கணக்கு தோன்றும்.

3. இதற்குப் பிறகு, வாடிக்கையாளர் தனிப்பட்ட Paytm UPI ஐடியை பயன்படுத்த வேண்டும். வோடபோன் வாடிக்கையாளர்கள் அவர்கள் எண்ணின் கடைசியில் (98**.vf@paytm) என்பதையும், ஐடியா வாடிக்கையாளர்கள் (98**.id@paytm) என்பதையும் பயன்படுத்த வேண்டும்.

4. அதன் பிறகு தான் ரீசார்ஜ் தொகையை fix செய்ய வேண்டும்.

5. பின்பு பரிவர்த்தனையை முடிக்க UPI PIN-ஐ கொடுக்க வேண்டும்.

6. அதன் பிறகு உங்கள் தான் ரீசார்ஜ் செய்வது முடிவடையும், மேலும் வாடிக்கையாளர்களுக்கு என UPI குறிப்பு ஐடியும் தரப்படும்.

WeTransfer  பயன்படுத்தத் தடை?  இந்தியத் தொலைத்தொடர்புத் துறை அறிவிப்பு!

UPI ஐடி BHIM UPI உடன் பதிவு செய்யயாத வோடபோன் ஐடியா வாடிக்கையாளர்கள், இந்த வழிமுறையை பின்பற்ற வேண்டும்:

1. USSD குறியீடு என்னனா 99# ஐ டயல் செய்ய வேண்டும்.

2. அதன் பிறகு, வோடபோன் ஐடியா சந்தாதாரர் USSD குறியீட்டை டயல் செய்யப்பட்ட மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள அனைத்து வங்கி கணக்குகளையும் பார்ப்பார்.

3. அதற்குப் பிறகு, வாடிக்கையாளர் தனது UPI ஐடியில் பதிவு செய்ய விரும்பும் வங்கிக் கணக்கைத் தேர்ந்தெடுத்து அதன் பிறகு வாடிக்கையாளர்கள் அவர்களுக்கான UPI PIN-ஐ அமைக்குமாறு கேட்கப்படும்.

4. UPI PIN சேமிக்கப்பட்ட பிறகு, USSD குறியீடு என்னனா 9913# ஐ மீண்டும் டயல் செய்ய வேண்டும்.

5. அதற்குப் பிறகு, அந்த மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள வோடபோன் ஐடியா சந்தாதாரரின் வங்கிக் கணக்கு தோன்றும்.

6. அதன் பிறகு, வாடிக்கையாளர்களுக்கான தனிப்பட்ட Paytm UPI ஐடியை செலுத்த வேண்டும். வோடபோன் வாடிக்கையாளர்கள் அவர்கள் எண்ணிற்கு பிறகு (98**.vf@paytm) என்பதையும், ஐடியா வாடிக்கையாளர்கள் (98**.id@paytm) என்பதையும் இணைக்க வேண்டும்.

7. இப்போது ரீசார்ஜ் தொகையை செலுத்தவும்.

8. பரிவர்த்தனை முடிக்க UPI PIN-ஐ கொடுக்க வேண்டும்.

9. அதற்குப் பிறகு, உங்கள் ரீசார்ஜ் முடிக்கப்படும், மேலும் வாடிக்கையாளர்களுக்கு UPI குறிப்பு ஐடியும் தனியாக தரப்படும்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here