Home அரசாங்க வேலை TNPSC டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியானது.. பதிவிறக்கம் செய்வது எப்படி?

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியானது.. பதிவிறக்கம் செய்வது எப்படி?

1214
0
Share

TNPSC Group 4 Exam Hall Ticket downloadTNPSC Group 4 Exam Hall Ticket :Group 4 தேர்வுக்கான அனுமதிச் சீட்டு வெளியாகியுள்ளது. www.tnpscexams.in / www.tnpsc.gov.in என்ற தேர்வாணைய இணையத்தளத்தில் அனுமதிச் சீட்டுகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 (TNPSC Group 4) தேர்வுக்கான அனுமதிச் சீட்டு வெளியாகியுள்ளது. எந்தவித சிரமமின்றி விண்ணப்பதாரர்கள் தேர்வாணைய இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

முன்னதாக, 7,301 குரூப் 4 காலிப்பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடத்த மார்ச் 29ம் தேதியன்று வெளியிட்டது. ஏப்.28ம் தேதி வரை இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

தேர்வு நாள்: 24/07/2022

தேர்வு நேரம்: 9.30 மணி முதல் 12.30 மணி வரை

அனுமதி சீட்டை பதிவிறக்கம் செய்வது எப்படி?

www.tnpscexams.in / www.tnpsc.gov.in என்ற தேர்வாணைய இணையதளத்தில் அனுமதி சீட்டுகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

முகப்பு பக்கத்தில் HALL TICKET DOWNLOAD – COMBINED CIVIL SERVICES EXAMINATION- IV (GROUP-IV SERVICES) (Hall Ticket) என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.

விண்ணப்ப பதிவு எண், பிறந்த தேதி ஆகிய விவரங்களை நிரப்ப வேண்டும்.

திரையில் தோன்றும் அனுமதிச் சீட்டை தங்கள் கணினியில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். தேர்வுக்கான மின்னணு அனுமதிச் சீட்டு இல்லாமல் விண்ணப்பதாரர்கள் தேர்வு கூடத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். எனவே, தேர்வர்கள் மறக்காமல் அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்வது நல்லது.

group 4 hall ticket 2022அனுமதிச்சீட்டு தனியாக அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்பட மாட்டாது. மேலும், அனுமதிச் சீட்டில் கொடுக்கப்பட்டுள்ள ஓவ்வொரு நிபந்தனையையும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.

வரும் 24ம் தேதி நடைபெறும் எழுத்துத் தேர்வின் முடிவுகளின் அடிப்படையில், விண்ணப்பதாரர் இணையவழிச் சான்றிதழுக்கு அனுமதிக்கப்படுவர். இதனையடுத்து, மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அனுமதிக்கப்படுவர்.

முக்கியமான நாட்கள்:
எழுத்துத் தேர்வு – ஜுலை 24
எழுத்துத் தேர்வு முடிவு வெளியீடு  – அக்டோபர் , 2022
சான்றிதழ் பதிவேற்றம் – அக்டோபர் , 2022
சான்றிதழ் சரிபார்ப்பு – நவம்பர் , 2022
கலந்தாய்வு – நவம்பர் , 2022

ஒவ்வொரு வகுப்புப் பிரிவுகளிலும் (ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர் அருந்ததியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட இசுலாமிய வகுப்பினர், பொதுப் பிரிவினர்) நியமனம் செய்யப்படவுள்ள எண்ணிக்கையை விட இரண்டு மடங்கு விண்ணப்பித்தார்கள் கலந்தாய்விற்கு அனுமதிக்கப்படுவர். எனவே, எழுத்துத் தேர்வில் மாணவர்கள் அதிக கவனம் செலுத்துவது மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here