Home லைஃப் ஸ்டைல் ஆரோக்கியம் பரவுகிறது ‘மார்க்பர்க்’ வைரஸ்..கடுமையாக இருக்கும்..உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

பரவுகிறது ‘மார்க்பர்க்’ வைரஸ்..கடுமையாக இருக்கும்..உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

3323
0
Share

marburg virus 2022Margburg Virus: வயிற்றுப்போக்கு, காய்ச்சல், குமட்டல் மற்றும் வாந்தி போன்ற அறிகுறிகள் மார்க்பர்க் வைரஸ் தாக்கப்பட்டவர்களுக்கு இருந்துள்ளன.

சமீபத்தில், ‘மார்க்பர்க்’ என்ற வைரசால் ஆப்பிரிக்காவிலுள்ள கானாவில் இருவர் உயிரிழந்திருப்பதாகவும், இதன் பாதிப்பு எபோலா வைரசை போன்று கடுமையாக இருக்கும் எனவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், “கானாவில் நடத்தப்பட்ட பரிசோதனையில் இந்த இருவருக்கும் மார்க்பர்க் வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது. இருப்பினும் செனகலில் உள்ள ஆய்வுக்கூடத்தில் இந்த முடிவு உறுதி செய்த பின்பே, இதை உறுதிப்படுத்த முடியும்” எனக் கூறியுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில், “இவர்களுக்கு வயிற்றுப்போக்கு, காய்ச்சல், குமட்டல் மற்றும் வாந்தி போன்ற அறிகுறிகள் இருந்தது” என்று கூறப்பட்டுள்ளது.

இந்த பரிசோதனையில், இந்த வைரஸ் தொற்று உறுதியானால், மேற்கு ஆப்பிரிக்காவில் மார்க்பர்க் வைரசால் பாதிக்கப்பட்ட இரண்டாவது பாதிப்பு பொதுவாக இருக்கும். இதற்கு முன்னர், கடந்த ஆண்டு கினியாவில் ஒருவருக்கு மார்க்பர்க் வைரஸ் உறுதியானதும், அதன் பிறகு வேறு யாருக்கும் இந்த தொற்று கண்டறியப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.மேலும், சோதனை முடிவு வருவதற்கு முன்பே, தேவையான நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

1967 முதல் இதுவரை 12 முறை கிழக்கு மற்றும் தென் ஆப்பிர்காவில் இந்த வைரஸ் பரவியுள்ளதாகவும், இதன் இறப்பு விகிதம் 24 சதவீதத்தில் இருந்து 88 சதவீதமாக வைரஸின் தீவிர தன்மையைப் பொறுத்து மாறியுள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here