Home லைஃப் ஸ்டைல் ஆரோக்கியம் ஆடி மாத பண்டிகைகள் 2022 – ஆடி மாத சிறப்புகள் மற்றும் கொண்டாடப்படும் பண்டிகைகளின் பட்டியல்.!

ஆடி மாத பண்டிகைகள் 2022 – ஆடி மாத சிறப்புகள் மற்றும் கொண்டாடப்படும் பண்டிகைகளின் பட்டியல்.!

1336
0
Share

aadi festivalsAadi Month 2022 | சூரியன் மிதுனராசியில் இருந்து கடக ராசிக்கு பெயர்ச்சி ஆகும் நாள், ஆடி மாதத்தின் முதல்நாள் ஆகும். இந்த ஆண்டு, ஆடி மாதம் 1 ஆம் தேதி, ஜூலை 17 ஆம் தேதி அன்று வருகிறது.

ஆடி மாதம் என்று கூறும் போதே, அம்மன் கோவில்கள், திருவிழாக்கள், விரதங்கள், சிறப்பு பூஜைகள் என்று களைகட்டும். ஆடி மாதம் என்பதை அம்மன் மாதம் என்றே கூறலாம். அந்த அளவுக்கு இந்த மாதம் முழுவதும் பல விசேஷங்கள் உள்ளன. தமிழ் மாதங்களின் அடிப்படையில் ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை உள்ள காலம் தட்சிணாயண புண்ணிய காலம் என்றும் தை மாதம் முதல் ஆனி மாதம் வரை உள்ள காலம் உத்திராயண புண்ணிய காலம் என்றும் அழைக்கப்படுகிறது. தட்சிணாயண புண்ணிய காலத்தின் தொடக்கம், பண்டிகைகளின் தொடக்கமாகக் கருதப்படுகிறது.

சூரியன் மிதுனராசியில் இருந்து கடக ராசிக்கு பெயர்ச்சி ஆகும் நாள், ஆடி மாதத்தின் முதல்நாள் ஆகும். இந்த ஆண்டு, ஆடி மாதம் 1 ஆம் தேதி, ஜூலை 17 ஆம் தேதி அன்று வருகிறது.

ஆடி மாதத்தில்தான் விரதம் இருந்து வழிபாடு செய்ய வேண்டிய முக்கியமான தினங்கள் வருகின்றன. ஆடி செவ்வாய், வெள்ளி, ஆடிப்பதினெட்டு, ஆடிப்பூரம் ஆடிப்பௌர்ணமி, அடி அமாவாசை, ஆடி தபசு, ஆடி கிருத்திகை, ஆடிப் பெருக்கு என பல சிறப்பு வழிபாட்டு தினங்கள் உள்ளன.

ஆடி கிருத்திகை: ஒவ்வொரு மாதமும் வரும் கிருத்திகை நட்சத்திரம் சிறப்பானது என்றாலும், ஆடி மாத கிருத்திகை நட்சித்திரம் மற்றும் அன்று இருக்கும் கிருத்திகை விரதம் மிகச் சிறப்பான நாளாகும். இந்த ஆண்டு ஆடி கிருத்திகை, சனிக்கிழமை ஜூலை 23 ஆம் தேதி ஆடி மாதம் 7-ம் தேதி வருகிறது. முருகனுக்கு உகந்த தினமான அன்று, விரதமிருந்து முருகனை வழிபட வேண்டும்.

murugan aadi kiruthikai
ஆடி வாஸ்து பூஜை: ஒவ்வொரு மாதமும், வாஸ்து நாட்கள் என்று சில நாட்கள் பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும். அந்த அடிப்படையில், ஆடி மாதம் 11 ஆம் தேதி, ஜூலை 27 அன்று வாஸ்து பூஜை நாள் வருகிறது. வாஸ்து நாள் எந்த தோஷமும் இல்லாத நாளாக இருக்கும். தட்சிணாயன புண்ணிய காலத்தில் ஆடி மாதத்தில் வாஸ்து நாளன்று பூஜை செய்து, வீடு கட்ட தொடங்கினால், தை மாதத்தில், உத்திராயண புண்ணிய காலத்தில் கிரஹபிரவேசம் செய்து முடிப்பது மிகச் சிறப்பாகும். அதுவும் இல்லமால், தடங்கல் இன்றி வீடு கட்டும் வேலைகள் நிகழும்.

ஆடி அமாவாசை: முன்னோர்கள் வழிபாடு, கர்ம கடன்கள், தர்ப்பணம் என்று முன்னோர்களை வழிபட்டு, தோஷங்களை நீக்கவும், கருமங்கள் தீரவும், நம் மூதாதையரின் ஆசியைப் பெறவும் ஆடி மாதம் அமாவாசை உகந்தது. ஒரு ராசியில் சூரியன் சந்திரன் சேர்ந்து இருக்கும் நாள் அமாவாசையாக வருகிறது. சந்திரனின் வீட்டில், சூரியனும் சந்திரனும் ஒன்று சேரும் நாள் தான் ஆடி அமாவசை. இதனாலேயே இந்த நாள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஆடி 12 ஆம் நாளன்று, ஜூலை 28 ஆம் தேதி ஆடி அமாவாசை வருகிறது.

aadi amavasai 2022ஆடிப் பூரம்: ஆடி மாதம் 16 ஆம் தேதி, ஆகஸ்ட்1 அன்று, ஆடிப்பூரம் வருகிறது. அம்பாள் உருவெடுத்த தினமாக புராணங்கள் கூறுகின்றன. ஆண்டாள் ஜெயந்தியாகவும் கொண்டாடப்படுகிறது. மக்களை அரக்கர்களிடம் இருந்து ரட்சிப்பதற்காக அம்பாள் அவதரித்த தினம் என்று புராணங்கள் கூறுகின்றன. பல ஊர்களில், அம்மனுக்கு விசேஷமாக பூஜை செய்யப்பட்டு வளைகாப்பு செய்யப்படும்.

ஆடி பதினெட்டு: ஆடி மாதம் 18-ம் தேதி, ஆகஸ்டு 3 அன்று ஆடி 18 வருகிறது. தமிழகத்தில் நீர்ப்பாசனப் பகுதிகளில் புது வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வரும். ஒவ்வொரு ஆண்டும் காவிரி ஆற்றில், நீர் பெருக்கெடுத்து வருவதைத்தான் மக்கள் ‘ஆடிப்பெருக்கு’ என்று கொண்டாடுகிறார்கள். ஆடி பெருக்கை திருவிழா போல ஊரெங்கும் கொண்டாடுவார்கள்.

வரலட்சுமி விரதம்: ஆடி மாதம் 20-ம் நாள் ஆகஸ்ட் 5-ம் தேதி வரலட்சுமி விரதம் கொண்டாடப்படுகிறது. பெண்கள் சிறப்பு பூஜைகள் செய்து, விரதமிருந்து அம்மனுக்கு நைவேத்தியம் செய்து வழிபாடுவர்கள்.

அதே போல, ஆடி மாத வளர்பிறை திதிகளில் நாக பஞ்சமி, கருட பஞ்சமி அனுஷ்டிக்கப்படுகிறது. சர்ப்ப தோஷம், ராகு கேது தோஷம் உள்ளவர்கள் வளர்பிறை பஞ்சமி திதியில் ஆலயங்களில் நாக பிரதிஷ்டை செய்து புற்றுக்கு பால் ஊற்றி வழிபடுவார்கள். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண பாக்கியம் கைக்கூடும். குழந்தை இல்லாதவர்களுக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

ஆடி அறுதி: மற்ற தமிழ் மாதங்களைப் போல இல்லாமல், ஆடி மாதம் 32 நாட்கள் உள்ளன. ஆடி 32 ஆம் நாள் ஆடி அறுதி என்று கொண்டாடப்படுகிறது. ஆடி அறுதி என்று விவசாயிகள் நாற்று நடுவார்கள். ஆடி மாதம் பிறக்கும் போது விதை விதைப்பதும் முடியும் போது நாற்று நடுவது வழக்கம்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here