Home செய்திகள் உலகம் வரலாற்றில் முதல்முறையாக கேன்சர் மருந்து சோதனை வெற்றி.. முற்றிலும் குணப்படுத்தும் புதிய மருந்து கண்டுபிடிப்பு!

வரலாற்றில் முதல்முறையாக கேன்சர் மருந்து சோதனை வெற்றி.. முற்றிலும் குணப்படுத்தும் புதிய மருந்து கண்டுபிடிப்பு!

1624
0
Share

cancer drugஅமெரிக்காவில் புற்றுநோய்க்கான மருந்து பரிசோதனையின்போது, பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 18 பேருக்கும் நோய் முற்றிலும் குணமடைந்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

புற்றுநோய் தொடர்பான வரலாற்றில் முதல்முறையாக இந்த அதிசயம் நிகழ்ந்துள்ளதாக நியூயார்க்கில் உள்ள ஸ்லோவன் கெட்டரிங் புற்றுநோய் மருத்துவமனையின் லூயிஸ் டயாஸ் குறிப்பிட்டுள்ளார்.

உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நோய்களில் முக்கியமானதாக புற்றுநோய் திகழ்கிறது. பல்வேறு வகையான புற்றுநோய் உள்ள நிலையில், அதற்கான சிகிச்சை முறைகளும் கடும் வலியை ஏற்படுத்தும் வகையிலும், செலவு மிகுந்ததாகவும் இருக்கிறது.

இந்நிலையில், புற்றுநோய்க்கு சிகிச்சை அளிப்பதற்காக டாஸ்டர்லிமேப் (Dostarlimab) என்ற மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை மருத்துவ ரீதியாக பயன்படுத்த அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து, அமெரிக்காவில் பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 18 பேருக்கு இந்த மருந்தை செலுத்தி பரிசோதனை நடத்தப்பட்டது.

மூன்று வாரத்துக்கு ஒரு முறை வீதம், தொடர்ந்து 6 மாதங்களுக்கு இந்த மருந்து செலுத்தப்பட்டது. ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட மூலக்கூறுகளைக் கொண்ட இந்த மருந்தானது, மனிதஉடலில் மாற்று ஆண்டிபாடிகளாக செயல்படுகிறது. 6 மாத சிகிச்சைக்குப் பிறகு, அனைவருக்கும் புற்றுநோய் முற்றிலுமாக குணமடைந்தது.

புற்றுநோய் தொடர்பான வரலாற்றில் முதல்முறையாக இந்த அதிசயம் நிகழ்ந்துள்ளதாக நியூயார்க்கில் உள்ள ஸ்லோவன் கெட்டரிங் புற்றுநோய் மருத்துவமனையின் லூயிஸ் டயாஸ் குறிப்பிட்டுள்ளார்.

பொதுவாக புற்றுநோய்க்கான மருந்து பரிசோதனைக்குப் பிறகு, கீமோதரெபி. கதிர்வீச்சு மற்றும் ஊடுருவல் அறுவை சிகிச்சை போன்றவற்றை மேற்கொள்ளும் நிலைக்கு தள்ளப்படும் நிலையில், இந்த 18 பேருக்கும் எந்தவொரு மேல் சிகிச்சையும் தேவைப்படவில்லை என்று நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

இந்த பரிசோதனை முடிவுகள், மருத்துவ உலகை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளன. அனைத்து நோயாளிகளும் முழுமையாக குணமடைந்திருப்பது முதல்முறை என்று தெரிவித்துள்ள கலிபோர்னியா பல்கலைக் கழக பெருங்குடல் புற்றுநோய் சிகிச்சை நிபுணர் ஆலன் வெனூக், பரிசோதனையின்போது யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்றும் குறிப்பிடுகிறார்.

எனினும், இந்த மருந்தின் பயன்கள் குறித்து அதிக அளவிலானோர் மத்தியில் பரிசோதனை செய்ய வேண்டியிருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here