Home டெக்னாலஜிஸ் AUTOMATION ஸ்மார்ட் ஹோம்க்கு ஏற்ற பவர்ஃபுல் ரூட்டர் 128 டிவைஸ் வரை இணைக்க முடியுமாம்….

ஸ்மார்ட் ஹோம்க்கு ஏற்ற பவர்ஃபுல் ரூட்டர் 128 டிவைஸ் வரை இணைக்க முடியுமாம்….

715
0
Share

மொபைல் உலகில் நம்பர் 1 இடத்தில் இருக்கும் ரெட்மி நிறுவனம் தற்போது ஒரு புதிய பவர்ஃபுல் ரூட்டர்  அறிமுகம் செய்துள்ளது இதில் லேப்டாப், மொபைல் என 128 வைஃபை டிவைஸ்களை ஒரே நேரத்தில் இணைக்க முடியுமாம். ரெட்மி ax5 வைஃபை 6 ரூட்டர் இன்று வெளிவந்துள்ளது.
இந்த ரூட்டர் முதற்கட்டமாகச் சீனாவில் தற்போது விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவிலும் அறிமுகம்  செய்யப்படவில்லை வரும் என்று ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்தப் புதிய ரெட்மி ரூட்டர்  வெண்ணிறத்தில் உள்ளது.
நெட்வர்க் கவரேஜ்ல் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாமல் இருக்க நான்கு ஆன்டென்னாவை பொருத்தப்பட்டுள்ளது. ஸ்மார்ட் ஹோம் ரூட்டர் பயன்பாட்டிற்கு இது சிறந்ததாக இருக்கும். 128 வைப்பைச் சாதனங்களுக்குத் தங்கு தடையின்றி இணைப்பு வழங்கும் என்றும் அந்த நிறுவனம் கூறுகிறது.
ரெட்மி ax5 வைப்பை 6 ரூட்டர் 2700 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஆனால் தற்போது சீனாவில் சலுகையாக 2400  விலையில் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்த ரேட்மி ax5 வைபை 6 ரூட்டர் 1755mbps  வேகம் வரை தங்கு தடையின்றி அளிக்கும் என்று ஜியோமி தெரிவித்துள்ளது. வைஃபை 5 விட 50% மேல் வேகம் கொண்டதாம்.

டிவிட்டரில் பிலீட் ( ஸ்டோரி ) வசதி இந்தியாவில் அறிமுகமாகிறது…

இந்த ரெட்மி ax5 வைஃபை mesh நெட்வொர்க்கிங் ஆதரிக்கிறது. எனவே பயனர்கள் எந்த மூலையிலிருந்தும் தங்கள் குடியிருப்பில் தங்கு தடையின்றி இணையத்தை பயன்படுத்த முடியும்.
அதே போல் ஸ்மார்ட் ஹோம்ற்கு இந்த ரூட்டர் மூலம் ஸ்மார்ட் டிவி, ஸ்பீக்கர், பாதுகாப்பு கேமராக்கள் உள்ளிட்ட பல்வேறு வைப்பை அம்சம் கொண்ட சாதனங்கள் 128 வரை எளிதில் இணைத்து இயக்க முடியும் என்று ரெட்மி தெரிவித்துள்ளது.
அதிக அளவிலான வைப்பைச் சாதனங்கள்  பயன்படுத்துவோருக்கு இது ஒரு நல்ல பவர்ஃபுல் ரூட்டராக திகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here