Home சினிமா விமர்சனம் வாழ்க்கை கொடுமையானது.. மீனாவின் கணவர் இறப்பு குறித்து நடிகை குஷ்பு ட்வீட்!

வாழ்க்கை கொடுமையானது.. மீனாவின் கணவர் இறப்பு குறித்து நடிகை குஷ்பு ட்வீட்!

1425
0
Share

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் மறைவுக்கு அவரின் நெருங்கிய தோழியும் நடிகையுமான குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் உடல் நலக்குறைவால் காலமானார். அவரின் இறப்பு செய்தி திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ரஜினி, கமல், அஜித், விஜய் என டாப் ஹீரோக்களுடன் சேர்ந்து நடித்தவர் நடிகை மீனா. இவரை தமிழ் சினிமாவின் கண்ணழகி என்றே அழைப்பர். வெற்றி விழா படங்களில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்தவர் திருமணத்திற்கு பிறகு பெங்களூரில் செட்டில் ஆனார்.

meena's husband deathசில ஆண்டுகள் சினிமாவில் இருந்து கேப் எடுத்தவர் அதன் பின்பு கம்பேக் கொடுத்தார். தற்போது துணை நடிகை, அண்ணி, அக்கா ரோல்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் மலையாளத்தில் வெளியான ’ப்ரோ டேடி’ படத்தில் மோகன்லால் ஜோடியாக நடித்தார். இவரின் செல்ல மகள் நைனிகாவும் விஜய்யுடன் சேர்ந்து தெறி படத்தில் நடித்து இருக்கிறார். இந்நிலையில், மீனாவின் கணவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அதிலிருந்து மீண்டாலும் அவருக்கு நுரையீரல் பாதிப்பு தொடர்ந்து இருந்து வந்துள்ளது. இதற்காக கடந்த 3 மாதமாக மருத்துவமனையில் சிகிச்சையும் எடுத்து வந்து இருக்கிறார்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நள்ளிரவு காலமானார். இந்த செய்தி மீனாவின் குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சினிமா உலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மீனா அவரின் மகள் மற்றும் குடும்ப உறவினர்களுக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் தங்களது ஆறுதல் செய்திகளை தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில், மீனாவின் கணவர் வித்யாசாகர் மறைவுக்கு அவரின் நெருங்கிய தோழியும் நடிகையுமான குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில் குஷ்பு கூறியிருப்பதாவது, “ஒரு மோசமான செய்தியுடன் காலை எழுந்திருக்கிறேன்.நடிகை மீனாவின் கணவர் சாகர் நம்மிடையே இல்லை என்பதை அறிந்து மனம் உடைந்தது. நீண்ட நாட்களாக நுரையீரல் நோயால் அவதிப்பட்டு வந்தார். மீனா மற்றும் அவரது மகளை நினைத்து இதயம் கணக்கிறது. வாழ்க்கை கொடுமையானது. துக்கத்தை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை , அவரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்” என்று தெரிவித்துள்ளார்


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here