Home லைஃப் ஸ்டைல் ஆரோக்கியம் கொரோனாவை கட்டுப்படுத்த காண்டாக்ட் டிரேஸ் முறை : தமிழகத்தில் அமல்படுத்த முடிவு…

கொரோனாவை கட்டுப்படுத்த காண்டாக்ட் டிரேஸ் முறை : தமிழகத்தில் அமல்படுத்த முடிவு…

460
0
India Corona
Share

உலகையே உயிர்பயத்தில் நடுங்கவைத்துக் கொண்டிருக்கும் கொரோனவை கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைக்கவேண்டும் என்று அரசு தரப்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Corona virusIndia

தற்போது தமிழகத்தில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இத்தோடு இந்தியாவில் 39 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து பரவுவதைத் தடுக்க காண்டாக்ட் டிரேஸ் முறையைத் தீவிர கண்காணிப்பில் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த முறை ஏற்கனவே சீனாவில் நடைமுறைப்படுத்தி ஓரளவிற்குப் பரவுவது குறைந்துள்ளது.

சீனாவில் பொது இடத்தில் அதிக மக்கள் சேராமலும், ஏற்கனவே நோய் பாதித்தவர்களைத் தனிமைப்படுத்தி சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகின்றது. மேலும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் உடன் இருந்தவர்களை மருத்துவர்கள் நேரில் கண்காணித்து வந்தனர்.

China

அதில் 9 பேருக்கு கொரோனா வைரஸ் (கோவிட் – 19) பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதே போல் சிங்கப்பூர் ,மற்றும் பாதிப்பிற்குள்ளான அணைத்து நாடுகளும் இந்த முறையை அமல்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் சென்ற இடங்கள் மற்றும் அவருடைய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அனைவரும் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். அவர்களில் யாருக்காவது கொரோனா  (கோவிட் – 19) பாதிப்பு கண்டறியப்பட்டால் உடனே மருத்துவர்களால் தனிமைப்படுத்தி சிகிச்சையாக்கப்பட்டு வருகிறது.

மேலும் இந்தியாவின் தொலைப்பேசி நெட்ஒர்க் நிறுவனங்களான ஜியோ மற்றும் பிஎஸ்என்எல் போன்ற நிறுவனங்கள் அவர்கள் கால் செய்யும் போது ரிங் ஒலிக்குப் பதிலாக ஒரு விழிப்புணர்வு செய்தி ஒளிரப்படுகிறது.

BSNL-Jio

அந்த செய்தியில் இரும்பிக்கொண்டே தொடங்கி இரும்பலின் போது மற்றும் தும்பலின் போது கைக்குட்டை பயன்படுத்த வேண்டும். சோப்புகளால் கையினை என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. யாரையும் தொட்டுப் பேசாமல் மற்றும் சற்று விலகி இருக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல் எதிர் முனையில் அழைப்பு எடுக்கும் வரை அறிவுறுத்தப்படுகிறது.

இதுபோன்று பல்வேறு நடவடிக்கைகளை மத்திய மற்றும் மாநில அரசு எடுத்து வருகிறது.இதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பும் பாராட்டுகளும் குவிந்த வண்ணம் இருக்கிறது. மேலும் மக்கள் இந்த காண்டாக்ட் டிரேஸ் முறைக்கு ஒத்துழைப்பு தருமாறு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here