Home டெக்னாலஜிஸ் AUTOMATION விடாமுயற்சி என்ற பெயருடன் செவ்வாய் கோளுக்குச் செல்லும் ரோவர். நாசா விண்கலத்தைச் செலுத்த முடிவு செய்துள்ளது…

விடாமுயற்சி என்ற பெயருடன் செவ்வாய் கோளுக்குச் செல்லும் ரோவர். நாசா விண்கலத்தைச் செலுத்த முடிவு செய்துள்ளது…

780
0
Alex Rover
Share

அமெரிக்காவில் உள்ள பள்ளிகளில் விண்கலத்திற்கு என்ன பெயர் வைக்கலாம் என்ற போட்டி நாசாவால் நடைபெற்றது. அதில் ஏராளமான பெயர்கள்,மாணவர்களிடம் இருந்து பெறப்பட்டத்து . அதில் அலெக்ஸ் என்ற மாணவர் “பெர்சிசவரன்ஸ்” என்ற பெயரைப் பரிந்துரைத்தார். அந்த பெயரை நாசா தேர்ந்தெடுத்துள்ளது. பெர்சிசவரன்ஸ் என்பதன் பொருள் விடாமுயற்சி ஆகும்.

RoverNasa

நாசா வரும் ஜூலை மாதம் ஒரு ரோவர் விண்கலத்தைச் செவ்வாய் கோளுக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளது. அந்த விண்கலத்திற்கு பெர்சிசவரன்ஸ் என்ற பெயரைச் சூட்டியுள்ளனர். இந்த விண்கலம் 2021-இல் செவ்வாய் கோளை சென்றடையும் என்று அறிவித்த நிலையில் தற்போது இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது.

புதிய தோற்றத்தில் பஜாஜ் சேடக்

மேலும் இந்த பெயரைப் பரிந்துரைத்த அந்த மாணவர் பேசும் போது விடாமுயற்சி என்ற பெயர் ஆனது நாட்டின் விடாமுயற்சியைத் தாண்டி அனைத்து மக்களின் நோக்கத்தைக் குறிக்கும் என்று கூறியுள்ளார்.செவ்வாய்,நிலா போன்றவற்றை எல்லாம் கடந்து நாம் ஓர் புதிய உலகத்தைக் கண்டுபிடிக்க உள்ளோம்.

Nasa Alex

ஆதலால் இம்மாதிரியான ரோவர் போன்ற விண்கலங்கள் நம்மை வெற்றிப் பாதைக்குக் கொண்டு செல்கிறது.எனவே பல தடங்கல்கள் ஏற்பட்டாலும் நாம் அதை விடாமல் எதிர்கொள்ளத்தான் போகிறோம்.ஆகையால் நான் இப்பெயரைப் பரிந்துரைத்தேன் என்று கூறியுள்ளார்.

இவ்விண்கலம் செவ்வாய் கோளில் ஓராண்டு இருந்து ஆய்வுகள் செய்யும்.அதாவது செவ்வாய் கோளில் ஓராண்டு ஆனது 687 நாட்களாகும்.

Rover

இவ்விண்கலம்,செவ்வாய் கோளின் பழமையைக் குறித்தும்.அதில் மனிதன் வாழ்வதற்கான தகுதி உள்ளதா என்ற தகவல் சேகரிப்பதோடல்லாமல்.அதன் கனிமவள மாதிரிகளையும் சேகரித்து வரும் என்று நாசா தரப்பில் தெரிவித்துள்ளனர்.

ஊரடங்கில் ஹிட் அடித்த மொபைல் apps ….

இந்த முயற்சி மனித ஆராய்ச்சியில் பெரிய மாற்றமாக இருக்கும் விண்வெளி பயணமாகக் கருதப்படுகிறது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here