Home லைஃப் ஸ்டைல் ஆரோக்கியம் புதிய திருப்பம் கொரோனாவுக்கு முடிவு கட்டும் ஆஸ்திரேலியா,…

புதிய திருப்பம் கொரோனாவுக்கு முடிவு கட்டும் ஆஸ்திரேலியா,…

1196
0
australia scientist coronavirus
Share

உலகில் உள்ள அனைவரையும் பயமுறுத்தி வரும் கொரோனாவினை கட்டுப்படுத்த முடியும் என்று ஆஸ்திரேலியாவில் உள்ள விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.கொரோனா வைரசை (கோவிட் – 19) மீண்டும் உருவாக்கி ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் உள்ள விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.

கொரோனா வைரசுக்கு எதிரான இந்த போராட்டத்தில் முக்கிய திருப்பு முனையாகப் பார்க்கப்படும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த கண்டுபிடிப்பின் காரணமாக இந்த கொரோனா வைரஸ் அறிகுறிகள் தெரியும் முன்னே தொற்று இருக்கிறதா, இல்லையா என்பதை இனி சோதனை செய்து பார்த்துவிட முடியும். அதேபோல் இந்த கொரோனா வைரசைக் கொல்ல மருந்தை விரைவில் கண்டுபிடிப்பது சாத்தியமாகும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சீனாவில் கொரோனா வைரசால் (கோவிட் – 19) பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி, கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,974 ஆக உயர்ந்துள்ளது. 132 பேர் இறந்து போனதாகச் சீனாவின் சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. சீனாவில் ஒரே நாளில் 1500 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டாக்டர் அஷ்வினின் அதிர்ச்சி தகவல்?

Dr. Ashwin vijai

கொரோனா எனும் வைரஸ் தடுக்க மருந்து இன்னும் கண்டு பிடிக்கவில்லை என்று அனைவருக்கும் தெரிந்த ஒன்றே ஆனால் நமது Dr. அஷ்வின் என்ன கூறுகின்றார் என்றால் தினமும் நாம் சாப்பிடும் உணவில் கொரோனவினை தடுக்க மருந்து உள்ளது என்று திக்கிடும் தகவல் கூறியுள்ளார்.

இதைச் சாப்பிட்ட கொரோனா வராதாம்!

நாம் சாப்பிடும் முன் ஒரு விரல் அளவு இஞ்சியை எடுத்து அதை வெந்நீரில் போட்டுக் கொதிக்க வைத்தோ அல்லது டீயில் போட்டோ குடிக்கலாம். இதை ஒரு நாளைக்கு இரு வேளைகள் குடிக்கலாம், அதற்கு மேலும் குடிக்கலாம்.

இரண்டாவது பச்சைக் காய்கறிகள்

அரைக்கீரை, சிறுகீரை, முளைக்கீரை, முருங்கை கீரை உள்ளிட்ட கீரை வகைகளைச் சாப்பிட்டு வந்தால் நோய் வராமல்  தடுக்கலாம் மற்றும் வைட்டமின் சி சத்து கொண்ட பழங்கள்,காய்கறிகள் போன்றவை சாப்பிட்டால் நோய் வராமல் தவிர்க்கலாம்.

அடுத்து நம் முன்னோர்கள் அன்றாடம் பயன்படுத்திய மஞ்சள்  (கிருமி நாசினி). இந்த கிருமிநாசினியான மஞ்சளைத் தினந்தோறும் உணவில் சேர்த்து வர வேண்டும்.  மேலும், நம் சாப்பிடும் சாம்பார் மற்றும் ரசம் போன்ற உணவில் கலந்து சாப்பிட்டால் இந்நோயினை கட்டுப்படுத்தலாம்.

மேற்கொண்ட உணவுகளை உட்கொண்டால் கொரோனா போன்ற கொடிய வைரஸ் நோயிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம் என டாக்டர் அஷ்வின் விஜய் தெரிவித்துள்ளார்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here