Home அறிவியல் கொரோனா வைரஸ் உயிரி ஆயுதமா?

கொரோனா வைரஸ் உயிரி ஆயுதமா?

608
0
Share

சீனாவில் விரைந்து பரவி வரும் புது கரோனா வைரஸ் தாக்கம் உயிரி போர்முறை தந்திரமா?- சந்தையில் அமெரிக்கா-சீனா இடையே நிலவி வரும் போட்டியின் வெளிப்பாடா?

சீனாவில் இதுவரை இல்லாத புது கரோனா வைரஸ் பாதிப்பால் பலர் இறப்பதாகவும், ஆயிரக்கணக்கானோர் நோய்ப் பாதிப்பில் இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.

இந்தியாவில் இது நாள் வரை ஒருவருக்கு கூட நோய் தாக்கம் இல்லை என்றாலும்,PMO தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று இந்தியாவில் 176 பேருக்கும் மேற்பட்டோர் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.

கொரோனாவின் கோரப்பசி! ஒரே வாரத்தில் 100க்கும் மேற்பட்டோர் பலி

அண்டை நாடான நேபாளத்தில் ஒருவருக்கு நோய்ப் பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது.

சென்னையிலும் நோய்ப் பாதிப்பு ஏற்பட்டால் உடனே சிகிச்சை அளிக்க அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 10 படுக்கை கொண்ட தனிமை வார்டுகள் தயார் நிலையில் உள்ளது. விமான நிலையங்களிலும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவை தேவை தான்
என்றாலும் போதுமானதா? என்ற கேள்விக்கு சில விசயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது.

பல நூற்றாண்டுகளாக நாம் கரோனா வைரசுடன் இருந்து வந்தாலும் 2002க்கு முன்னர் உயிரிழப்புகள் அதனால் ஏற்படவில்லை. 10-30% சளித்தொல்லைக்கு அது காரணமாக இருந்து வந்தது. அது RNA வைரசைச் சார்ந்தது. அதில் ஆல்பா, பீட்டா, டெல்ட்டா, காம்மா என 4 வகை இருந்தாலும் ஆல்பா, பீட்டா வகை மட்டுமே மனிதர்களைத் தாக்கும் திறன் கொண்டது. முக்கியமானதாக HCoV 229E,NL63,OC43,HKU1 -இந்த 4 வைரசைச் சுட்டிக்காட்டலாம்.

வைரஸ் தாக்கும் திறனுக்கு மனித செல்களில் ஒட்ட உதவும் Surface spike Glycoprotein மிக முக்கியமானது.
2002 ல் சீனாவின் குவாங் டாங்க் பகுதியில் வௌவால்களிலிருந்த வைரஸ் மாற்றம் அடைந்து (இயற்கையா/செயற்கையா?) SARS எனப்படும்  உயிர்க்கொல்லி நோயாக உருவெடுத்து 29 நாடுகளிலுள்ள 8098 பேரைத் தாக்கியதோடு 774 உயிரிழப்புகளை ஏற்படுத்தியது. இறப்பு விகிதம்(case fatality rate) 10% ஆக இருந்தது.உயிர்க்கொல்லி நோயாக உருவெடுக்கக் காரணமென்ன? இந்த வைரஸ் எப்படிப் பரவுகிறது என்பதில் இன்னமும் தெளிவான முடிவுகள் இல்லை.

2வது முறையாக சௌதி அரேபியாவை மையமாகக் கொண்டு ஒட்டகங்கள் வாயிலாக  வளர்ந்து, மாற்றம் (இயற்கையா/செயற்கையா?) MERS எனும் நோயாக உருவெடுத்து 27 நாடுகளில் 2494 பேர்களைப் பாதித்து 858 உயிரிழப்புகளையும் ஏற்படுத்தியது. SARS பாதிப்பு 2004ல்
நிறைவடைந்த நிலையில் MERS பாதிப்பு தொடர்ந்து  கொண்டு தான் இருக்கிறது. MERS ன் இறப்பு விகிதம் 36%.

தடுக்க முடியுமா! முடியாதா! சித்த முறையில் கொரோனாவுக்கு தீர்வு,…

SARS ல் சளித்தொல்லை அதிகமாக இருந்தது. MERSல்லோ சளித்தொல்லையோடு ஜீரணக் கோளாறு+சிறுநீரக பாதிப்பும் சேர்ந்து இருந்தது. SARS வைரஸ் ACE2 receptor மூலமும், MERS
DPP4 receptor மூலமும் தன்னை மனித செல்களுடன் இணைத்துக் கொண்டு பாதிப்பை ஏற்படுத்தியதே அந்த வேறுபாட்டிற்குக் காரணம்.

2019 டிசம்பரில் சீனாவில் வூகான் பகுதியில் சட்டவிரோத விலங்கு இறைச்சிக் கூடம் உள்ள இடத்தில் தொடங்கிய நிமோனியா காய்ச்சலை ஏற்படுத்தும் இந்த கிருமி இதுவரை மனிதர்களைப் பாதிக்காத நிலையில் அதற்கு 2019 nCoV எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதுவரை 41 பேர் இறந்தும், 1400க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் இறப்பு விகிதம் 4% என தற்போதைய சூழலில் கணக்கிடப்பட்டுள்ளது. இந்த புது வைரஸ் பற்றிய முழுத்தகவல்கள் இன்னமும் வெளிவரவில்லை. இருப்பினும் தற்போதைய புள்ளிவிவரப்படி இதன் தொற்று  விகிதம் (Infectivity) அதிகமாகவும்,நோய்த் தாக்கம்(Virulence) சற்று குறைவாகவும் இருப்பதாகத் தெரிகிறது. வௌவால்களில்
இந்த வைரஸ் மாற்றம்  அடைந்திருக்கக் கூடும் என்பது செய்தியாக இருந்தாலும் பாம்புகளின் மூலம் இவை பரவியிருக்கலாம் என்ற ஆய்வுக் கட்டுரை மிகச் சமீபத்தில் சீனாவில் வெளிவந்தாலும், பெரும்பாலான ஆராய்ச்சியாளர்கள் அதை ஏற்கவில்லை. (வெய் ஜி பாம்புகளிடமிருந்து வைரஸ் பரவியிருக்கலாம் எனக் கூறினாலும், டேவிட் ராபர்ட்சன்-Virologist,Glasgow University, UK, பாலோ எடுஆர்டோ பிராண்டோ(Virologist, University of Sao Paulo), குய் ஜீ(Virologist, பாஸ்டியர் நிறுவனம்,சாங்காய்-சீனா),அமெரிக்க வைரஸ் ஆராய்ச்சியாளர்கள், அது சாத்தியம் இல்லை என்றும், புது கரோனா வைரஸ்  பாம்புகளைத் தாக்க முடியும் என்பதற்கான தெளிவான ஆதாரங்கள் இல்லை என்றும் கூறி கடுமையாக மறுப்பதுடன், பாலூட்டிகள்,பறவைகளை மட்டுமே அந்த வைரஸ் எளிதில் தாக்கும் எனக் கருத்து கூறுகின்றனர். கமூடி (உறை)-(Mask) அணிவதால் இந்த வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்த முடியாது.

இப்புது வைரசின் தாக்கத்தில் மூக்கில் நீர் வருதல் இல்லை. மேலும் ஜீரணக் கோளாறுகளும் பெரும்பாலும் இல்லை.  மூச்சுத் திணறல் என்பது நோய்ப் பாதிப்பு ஏற்பட்டு 8-9 நாளில் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கும் சூழல்  ஏற்பட்டாலும் தீவிர நுரையீரல் பாதிப்பு(ARDS) 10-11 நாளில் ஏற்பட்டு சில சமயங்களில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு ஏற்படுகிறது.

சீனா இந்த வைரசின் முழு மூலக்கூறு ஆய்வை ஜனவரி 10,2020 ல் உலக சுகாதார நிறுவனத்திற்கும்,உலக அளவில் செயல்படும் “புளூ” தடுப்பு நிறுவனத்திற்கும் அளித்துள்ளது வரவேற்கத்தக்கது.

மூலக்கூறு ஆய்வுகளின்படி இப்புது வைரஸ் SARS வைரசுடன் 70-99% ஒத்துள்ளது ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.

Brent Satterfield எனும் Salt lake cityவில் மூலக்கூறு மூலம் இவ்வைரசை கண்டுபிடிக்கும் பரிசோதனை ஆய்வகத்தை நடத்தி வரும் அறிஞர் இந்தியாவில் குஜராத்தில், மூலக்கூறு ஆய்வகக் கிளைகள் நடத்தி வருவது முக்கியமான விசயம்.

மூலக்கூறு ஆய்வில் இவ்வைரஸ் 29903 Base அலகுகள் நீளமுடையது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இம்மாற்றம் பல காலங்களில், பல சமயம் நடக்காமல், மிகச் சமீபமாக (அக்டோபர், 30 ,  2019- நவம்பர் 29,2019-இடைப்பட்ட காலத்தில்) பொதுவான வைரஸ் பெருகும் மூதாதையரிடமிருந்து (விலங்காக இருக்கலாம்) ஒரே மாற்றம் மூலம் மனிதரைத் தாக்கும் தன்மை பெற்றுள்ளது என்று DNA ஆய்வு மேற்கொண்டவர்கள் ஆராய்ச்சிக்குப் பின் கருத்து தெரிவித்துள்ளனர்.

24 மாதிரிகளில் வைரசில் ஏற்பட்டுள்ள மாற்றம் மிகவும் ஒத்து இருப்பதாலும்,86.7% SARS வைரசுடன் ஒத்தும்,96% வௌவால்களில் உள்ள வைரசுடன் ஒத்து இருப்பது சமீபத்தில் + ஒருமுறை மாற்றம் பெற்று மனிதரைத் தாக்கும் திறனை இவ்வைரஸ் அடைந்துள்ளது எனும் முடிவுக்கு வலு சேர்ப்பதாக உள்ளது.

பல நாடுகளில்(13 நாடுகளைத் தாண்டி) பரவிப் பாதிப்பை ஏற்படுத்திய போதிலும், இறப்பு என்பது இதுவரை சீனாவில் மட்டுமே ஏற்பட்டுள்ளது. மேலும் மனிதன்To மனிதன் – நோய் பரவுதல் சீனாவில் மட்டுமே மிக,மிக அதிகமாக நடந்துள்ளது. பிற இடங்களில் அதிகமில்லை.

ஏன் இது உயிரி போர்முறை தந்திரமாக இருக்கக் கூடாது?-

1.SARS நோய் தாக்க காலகட்டத்தில் வைரசின் ஒரு வகையான HKU1 சமூக நிமோனியா பாதிப்பிற்கு(Community acquired pneumonia) காரணமாக 2.4% என்ற எண்ணிக்கையிலிருந்ததோடு, 2016 அமெரிக்காவில் Cleveland பகுதியில் 1.8% தீவிர நுரையீரல் நோய் தாக்கத்திற்கு(HKU1) காரணமாக இருந்ததிலிருந்து சமுதாயத்தில் அதன் தாக்கம் இருப்பது உறுதியாகிறது.

2.Alan Cantwell எனும் Virologist “carona virus genetic engineering ” என்ற தலைப்பில் Pub- Medல் தேடியபோது 1987ல் இருந்து 107 ஆய்வுக் கட்டுரைகள் மருத்துவ இதழ்களில் அது தொடர்பாக வெளிவந்துள்ளதைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

3.ரஷ்ய உயிரிபோர்முறை ஆய்வாளர் கலோசினோவ், கரோனா வைரஸ் மாற்றம் உயிரி போர்முறை தந்திரமாக இருக்கக்கூடும் என்பதைப் பதிவிட்டுள்ளார்.

4.Washington Times பத்திரிக்கையில் ஜனவரி 24 தேதி Bill Gertz என்னும் பத்திரிக்கையாளர் ,இஸ்ரேல் உளவுத்துறை உயிரி போர்முறை ஆய்வாளரான Dany Shoham என்பவரை மேற்கோள் காட்டியும், சீனாவில் தற்போது நோய் பாதித்த வூகான் (Wuhan) பகுதியில் தான் சீன அரசால் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் வைரசைக் கையாளும் அங்கீகாரம் பெற்ற வைரஸ் ஆய்வு நிறுவனங்கள்(Wuhan Institute of Virology) உள்ளது எனும் முக்கிய விசயத்தைப் பகிர்ந்துள்ளார்.
சீன நோய்தடுப்புத்துறை அதிகாரிகள் Wuhan விலங்கு சந்தையில் உள்ள விலங்குகள் மூலம் நோய் தாக்கம் ஏற்பட்டிருக்கலாம் எனக் கருத்து தெரிவித்தாலும் (சந்தையில் சீன-அமெரிக்கப் போட்டி காரணமாக) அமெரிக்கா இப்போர்த் தந்திரத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கருத்தையும் அப்பத்திரிக்கை பதிவு செய்துள்ளது.

இதன் மூலம் அமெரிக்கா, சீனாவிற்குப் பாடம் கற்பிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது என்பதைப் புறந்தள்ள முடியாது. (கூட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவிற்குப் பகிரப்பட்ட சீன ரத்த மாதிரிகள் உயிரி போர்முனைக்கு உதவியிருக்கலாம்.)

5.அமெரிக்கத் தேசிய நோய் நிறுவனத்தின் இயக்குநரும் ,தொற்று நோய் விசயத்தில் உலகத்தில் தலை சிறந்த வல்லுந‌ருமான Dr.Anthony Fauci அவர்களின் அமெரிக்க மருத்துவ இதழில் (JAMA)ஜனவரி 23ல் வந்த ஆய்வுக் கட்டுரையும், அவருடைய தொலைக்காட்சி பேட்டியும் மிகவும் முக்கியமானது. கடந்த 20 ஆண்டுகளில் 3ம் முறையாக கரோனா வைரஸ் மாற்றம் அடைந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் அதைப் பற்றிச் சரியாகப் புரிந்து கொள்வது முக்கியமாகிறது. நோய் தடுக்க தடுப்பூசி என வருகையில் தற்போதுள்ள முன்னேறிய தொழில்நுட்பமான Messenger RNA மூலம் 3 மாதத்திற்குள் தடுப்பூசி உருவாக்கும் பணி நிறைவடைந்து விடும் என்றும்,பரிசோதனைக்குப்பின் அதைப் பயன்படுத்தும் சூழலையும் உருவாக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளது சீனா தடுப்பூசி என வரும்போது அமெரிக்காவை நம்பியே இருக்க வேண்டும் எனும் மறைமுக எச்சரிக்கையா? எனச் சந்தேகிக்கத் தோன்றுகிறது. அதாவது அமெரிக்கப் பொருளாதாரத்துடன் மோதினால் சீனா போன்ற நாடுகள் கடும் விளைவுகளை(உயிரி போர்முறை?)சந்திக்க நேரிடும்; ஆக மற்ற நாடுகளும் இதை மனதில் கொண்டு செயல் பட வேண்டும் என்ற கோணத்திலும் சிந்தனையைச் செலுத்தினால் மட்டுமே உண்மை வெளிச்சத்திற்கு வரும். உண்மை தெரிந்தால் மட்டுமே தகுந்த தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியும்.

சட்ட விரோத விலங்குகள் இறைச்சி சந்தை தான் முழுப் பிரச்சனைக்குக் காரணமா? என அறிய முடியும். வணிக
நலன்கள் மட்டுமே மேலோங்கியிருக்கும் தற்போதுள்ள சமூகத்தில் இப்படியும் சிந்திக்கத் தேவையுள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது.

மரு.வீ.புகழேந்தி.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here