Home செய்திகள் இந்தியா Wipro -வில் புதிய CEO நியமனம் ! பங்குகளின் விலை 7 % வரை உயர்வு…

Wipro -வில் புதிய CEO நியமனம் ! பங்குகளின் விலை 7 % வரை உயர்வு…

502
0
Share

IT துறையில் சிறந்து விளங்கும் மிகப்பெரிய  நிறுவனமான விப்ரோ நிறுவனம் தனது புதிய CEO  மற்றும் நிர்வாக இயக்குநரை நியமித்துள்ளது. இது தொடர்பாக வெளியான தகவலில், தனது குடும்ப சூழ்நிலை காரணமாகப் பதவி விலகப் போவதாக அபுதாலி நீமுச்வாலா கடந்த ஆண்டு  தான்  அறிவித்தார். தற்போது  அவருக்குப் பதிலாக தியரி டெலாபோர்டே நியமிக்கப்பட்டுள்ளதாக விப்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.wipro
டெலாபோர்ட், ஜூன் 1-ம் தேதியிலிருந்து தனது பொறுப்பை ஏற்றுக் கொள்வார் என்று அபுதாலி நீமுச்வாலா தெரிவித்துள்ளார். தற்போது இந்த நிறுவனத்தின் பங்குகளின் விலை மும்பை பங்குச் சந்தையில் ஏறக்குறைய  7 சதவீதம் அளவிற்கு உயர்ந்துள்ளது. தற்போது இதன் பங்கு விலையானது 6.57 சதவீதம் அதிகரித்து 212.25 ரூபாயாகவும் வர்த்தகமாகிறது.
தியரி டெலாபோர்ட் இதற்கு முன் Capgemini  குழுமத்தின் தலைமை இயக்க அதிகாரியாகவும், அந்த குழுமத்தின்  உறுப்பினராWipro new ceoகவும் இருந்தவர் ஆவார். Capgemini-யுடனான 25 ஆண்டுகளாக வாழ்க்கையில், பல்வேறு தலைமை பொறுப்பின் பதவிகளை வகித்து வந்தவர் இவர் . மேலும் அவர் Capgemini-யுடன் இந்தியாவின் செயல்பாடுகளையும் இதற்கு முன் மேற்பார்வையிட்டார். இதோடு அவரது Linked In விவரத்தில் கூறியிருப்பது, முன்னணி  கார்ப்பரேட் நிர்வாகி ஆர்தர் ஆண்டர்சனுடன் 1992-ல் சீனியர் ஆடிட்டராக தனது பணியை தொடங்கினார். இந்த நிறுவனத்துடன் மூன்று ஆண்டுகள் பணிபுரிந்த பிறகு , தான் Capgemini-க்கு சென்றுள்ளார். அங்கு ஏறக்குறைய 25 ஆண்டுகாலம் பணியாற்றியுள்ளார். டெலாபோர்ட் தனது இளங்கலை படிப்பினை பாரீஸிலிருந்தும், முதுகலை பட்டப்படிப்பை சோர்போன் பல்கலைக் கழகத்திலும் படித்து முடித்துள்ளார்.
wipro -வின் தலைமை செயல் அதிகாரியாக அபுதாலி நீமுச்வாலா  இதற்கு முன்பு TCS நிறுவனத்தில் பணியாற்றுவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த 2015-ல் தான் Wipro -விலும் அபுதாலி இணைந்தார். டெலாபோர்டே பாரீஸைத் தளமாகக் கொண்ட நிலையில் ரிஷாத் பிரேம்ஜிக்கு அறிக்கை அளிக்கப்போவதாக BSE-க்கு இந்த நிறுவனம் அளித்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ரிஸாத் பிரேம்ஜி, டெலாபோர்டேவை தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநராக வரவேற்பதில் நான் மிகுந்த சந்தோசமடைகிறேன். மேலும் அவரின் அனுபவம் வாய்ந்த திறனால் விப்ரோவினை மேலும் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு வழி நடத்த, சரியான நபர் டெலாபோர்டே என்று நாங்கள் மனமார நம்புகிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.

Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here