Home செய்திகள் இந்தியா ஊரடங்கால் புத்தகத்தை ஒப்படைக்காதவர்களிடம் அபராதம் வாங்கக்கூடாது – பொது நூலகத்துறை அறிவிப்பு…

ஊரடங்கால் புத்தகத்தை ஒப்படைக்காதவர்களிடம் அபராதம் வாங்கக்கூடாது – பொது நூலகத்துறை அறிவிப்பு…

497
0
Anna library
Share

கொரோனா வைரஸ் பரவலால் தமிழகம் முழுவதும் உள்ள அரசு நூலகங்களில் கடந்த இரு மாதங்களாக திறக்காமல் மூடப்பட்டுள்ளது. ஆனால்  நாளுக்கு நாள் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டு வருவதால், அரசு நூலகங்களைத் திறப்பதற்கான பணிகளை பொது நூலகத் துறை ஆரம்பித்துள்ளது.
libraryதமிழகத்தில் கிட்டத்தட்டப் பொதுநூலகத் துறையின் கட்டுப்பாட்டில் மட்டும் 4,622 நூலகங்கள் செயல்பட்டு வருகிறது. இவற்றில் மொத்தம் 8.79 கோடி நூல்கள் உள்ளன. மேலும் நூலகங்களில் 74.29 லட்சம் வாசகர்கள் நூலக உறுப்பினர்களாக இருந்து வருகின்றனர்.
கொரோனா வைரஸ் காரணமாக மார்ச் 24ம் தேதி தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அன்று முதல் நூலகங்களும் மூடப்பட்டுள்ளன. இந்த ஊரடங்கு 3 கட்டங்களாக நீடிக்கப்பட்டு இரண்டு மாதங்களுக்குப் பிறகு, தற்போது நூலகங்களைத் திறப்பதற்கான வேலைகள் தொடங்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக பொது நூலகத்துறை சார்பில் அனைத்து நூலகர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், ஊரடங்கு விலக்கப்பட்டு நூலகங்களைத் திறக்க அரசு அனுமதித்தால், அதற்குத் தேவையான முன் ஆயத்த பணிகளை மேற்கொள்ள வேண்டும். புத்தக வைப்பறையின் ஜன்னல்களைத் திறந்து, மின் விசிறிகளை இயக்க வேண்டும். புத்தகங்கள் அதிகம் இருந்தால், காற்று உரியும் கருவி மூலமாகத் தூசிகளை அகற்றி சுத்தம் செய்ய வேண்டும். புத்தகங்களைச் சுத்தம் செய்தால் மட்டும் தான் புழுவின் தாக்கம் இன்றி தவிர்க்க முடியும்.
நூலகம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்து தயார் நிலையில் வைக்க வேண்டும். நூலகத்தின் உட்புறத்தில் உள்ள மேஜைகள், நாற்காலிகள், நூலடுக்குகள், கணினிகள் உள்ளிட்ட அனைத்தையும், கிருமி நாசினியால்  தூய்மைப்படுத்த வேண்டும். நூலகத்துக்கு வரும் வாசகர்கள், முகக்கவசம் அணிந்து வருவதையும், தனி மனித இடை வெளியைக் கடைப்பிடிப்பதையும் வெளிப்படுத்தும் வகையில் விளம்பரப் பலகை போன்றவற்றை உறுதிப்படுத்த வேண்டும். கிருமிநாசினி மூலம் கைகளைச் சுத்தம் செய்த பின்னரே வாசகர்களை நூலகத்துக்குள் அனுமதிக்க வேண்டும்.
நூலகர்களின் கைப்பேசி எண்கள் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும். கைப்பேசி எண் இல்லாதவர்கள், முகவரியைக் குறிப்பிட வேண்டும். காய்ச்சல் மற்றும் சளியால் பாதித்தவர்களை உள்ளே அனுமதிக்கக் கூடாது. ஊரடங்கு காலத்தில் புத்தகத்தை உரியக் காலத்தில்  ஒப்படைக்காதவர்களிடம் அபராத கட்டணம் வசூலிக்கக்கூடாது. கொரோனா தொற்று பாதித்த யாராவது நூலகம் வந்தால், அவர்களைப் பற்றி மாவட்ட  நிர்வாகங்களுக்குத் தகவல் அளிக்க வேண்டும் போன்ற சில விதிகளுடன் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here