Home செய்திகள் இந்தியா வங்கிகளில் EMI பிடித்தாலோ,கேட்டு வற்புறுத்தினாலோ கடும் நடவடிக்கை ! நிர்மலா சீதாராமன்…

வங்கிகளில் EMI பிடித்தாலோ,கேட்டு வற்புறுத்தினாலோ கடும் நடவடிக்கை ! நிர்மலா சீதாராமன்…

486
0
Nirmala Seetaraman
Share

வாடிக்கையாளர்களிடம் இருந்து வங்கிகள் EMI பிடிப்பது தவறு என்றும் புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் உலகம் முழுவதும் விஸ்வரூபம் எடுத்து வருகிறது ஒரு சில நாடுகள் அதன் பிடியில் இருந்து சற்று மீண்டுள்ளது ஆனால் இந்தியாவில் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் உள்ளது. மேலும் இதன் பரவலை கட்டுப்படுத்த மே 31 ஆம் தேதி வரை தேசிய அளவில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. தற்போது இந்த ஊரடங்கில் கருத்தில் கொண்டு பல்வேறு வர்த்தக  நிறுவனங்கள், கடைகள், தியேட்டர்கள், பள்ளிகள், கல்லூரிகள், கோயில்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளது.

finance ministerஇந்த ஊரடங்கினால் பல்வேறு தரப்பு தொழிலாளர்கள் தங்கள் அன்றாட வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். தினக்கூலி தொழிலாளர்கள், மாதாந்திர சம்பளதாரர்கள், தொழிலதிபர்கள் என அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பல தளர்வுகள் கொடுக்கப்பட்டாலும்  வருமானமின்றியும் சம்பள குறைப்பினாலும் மீள முடியாமல் தவிக்கின்றார்கள்.

மேலும் ஒரு சில மக்கள் வீட்டு வாடகை, மின்சார கட்டணம் போன்றவற்றை கூட செலுத்த முடியாமல் தவித்து வருகிறார்கள். இதில் வங்கிகளில் வீடு கட்டவும், வாகனம் வாங்கவும் கல்விக்காகவும் கடன் வாங்கியவர்கள் மாதத்தவணை செலுத்த முடியாமல் பரிதவித்து வந்தனர். இந்நிலையில் வங்கிகளில் கடன் பெற்றவர்கள் 6 மாதங்களுக்கு EMI செலுத்தத் தேவையில்லை என ரிசர்வ் வங்கி அறிவித்தது. ஆனாலும் மும்பை, சென்னை உள்ளிட்ட சில முக்கிய இடங்களில் வீடு, வாகனம், கல்விக் கடன் வாங்கியவர்களுக்கு சம்பந்தப்பட்ட வங்கிகளில் இருந்து இந்த மாதத்திற்கான EMI தொகை பிடித்தம் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பேருந்து போக்குவரத்து துவக்கம் ! 65 நாட்களுக்குப் பிறகு சில முக்கிய விதிமுறைகளுடன் இயங்கின…

இதுகுறித்து வங்கித் துறை அதிகாரிகள் 6 மாதங்களுக்கு கடன் தவணையை செலுத்த முடியாதவர்கள் EMI பிடித்தத்தை தள்ளி வைக்க வேண்டும் என முன் கூட்டியே வங்கிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இல்லையெனில் கடன் வாங்கியவர்களின் கணக்கிலிருந்து அதற்கான தொகை தானாகவே பிடித்தம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தந்தி டிவிக்கு அளித்துள்ள பேட்டியில் வங்கி கடன்களுக்கான மாத தவணை செலுத்த 6 மாதத்திற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதை மீறி மாதத் தவணையை வசூல் செய்யும் வங்கிகளின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here