Home முகப்பு ட்ரெண்டிங் செய்திகள் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பேருந்து போக்குவரத்து துவக்கம் ! 65 நாட்களுக்குப் பிறகு சில முக்கிய விதிமுறைகளுடன் இயங்கின…

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பேருந்து போக்குவரத்து துவக்கம் ! 65 நாட்களுக்குப் பிறகு சில முக்கிய விதிமுறைகளுடன் இயங்கின…

473
0
Tamilnadu bus
Share

tamilnaduஇந்தியா முழுவதும் உள்ள கொரோனா பாதிக்கப்பட்ட இடங்களில் ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மற்ற இடங்களில் அனைத்தும் இயங்கும் என்று மத்திய அரசு ஆணையிட்டுள்ளது. ஆனால் மத்திய அரசு அளித்துள்ள தளர்வுகளில் மாநில அரசுகள் கொரோனா பாதிப்பு  பகுதியைக் கருத்தில் கொண்டு தளர்வுகளைக் குறைக்கவும் அதிகப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து தற்போது தமிழகத்தில் புதிதாக எந்த தளர்வும் அளிக்காமல் ஊரடங்கு ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால் பொது போக்குவரத்து வாகனங்கள் மட்டும் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
bussesஇந்த பொது போக்குவரத்துக்காகத் தமிழகம் முழுவதும் 8 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு மண்டலத்திலிருந்து வேறு மண்டலத்திற்குச் செல்ல வேண்டுமானால் இ – பாஸ் அவசியமாகக் கருதப்படுகிறது. ஆனால் அதே மண்டலத்திற்குத் தேவை இல்லை. இதில் 7,8 மண்டலங்களில்  மட்டும் இன்று பேருந்து போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை.
8 மண்டலங்களின் விவரங்கள்
மண்டலம் 1- கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கரூர், சேலம், நாமக்கல்
மண்டலம் 2- தருமபுரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி
மண்டலம் 3- விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி
மண்டலம் 4- நாகை, திருவாரூர், தஞ்சை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை
மண்டலம் 5- திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மண்டலம் 6- தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி
மண்டலம் 7- காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு
மண்டலம் 8- சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள்.
இ – பாஸ் முறையின் அவசியம்
அனைத்து வகையான வாகனங்களும் மேலே குறிப்பிட்டுள்ள மண்டலங்கள் மட்டும் செல்ல இ – பாஸ் அவசியம் இல்லை.
மேலும்  பேருந்தில் முகக் கவசம் அணிந்து வரும் பயணிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. பேருந்தில் ஏறுவதற்கு முன்னர் பயணிகளுக்குக் கிருமிநாசினி கொடுக்கப்படுகிறது. பேருந்துகளிலும் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது. சமூக இடைவெளி பின்பற்றும்படி இருக்கைகளில் அமர வைக்கப்படுகிறார்கள். பின்பக்க படிக்கட்டுகள் மூலம் பயணிகள் ஏறுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here