Home முகப்பு ட்ரெண்டிங் செய்திகள் தமிழக ஊர்ப் பெயர்களின் மாற்ற நடவடிக்கைக்குச் சத்குரு பாராட்டு….

தமிழக ஊர்ப் பெயர்களின் மாற்ற நடவடிக்கைக்குச் சத்குரு பாராட்டு….

610
0
sadhguru
Share

“தமிழ் என்பது ஒரு உணர்வுப்பூர்வமான மொழி”, தமிழக அரசு எடுத்துள்ள ஊர்களின் பெயர்களை மாற்றும் அரசாணைக்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு பாராட்டு மழை பொழிந்துள்ளார்.
தமிழ்நாட்டில் சில தினங்களுக்கு முன்பு ஊர்களின் பெயர்களைத் தமிழில் இருப்பது போலவே ஆங்கிலத்திலும் உச்சரிக்க வேண்டும் என்று புதிதாக அரசாணை இயற்றப்பட்டது. இதனைப் பாராட்டி ஈஷா சத்குரு டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் தெரிவித்துள்ள டிவீட்டில் கூறியிருப்பது :
தமிழ் ஒரு உணர்வுப்பூர்வமான மொழி, தொன்மையான கலாச்சாரம் மிகுந்த மொழி, இடத்தின் பெயர்களை அதன் பெருமை வாய்ந்த கலாச்சார சிறப்பு மற்றும் ஆன்மீக முக்கியத்துவத்தை, சார்ந்துள்ளது.
தமிழ் மக்கள் தங்கள் மண்ணின் மீது இணை பிரியாத ஆழ்ந்த உணர்வை வைத்துள்ளனர். அதன் பெயர் சூட்டும் மரபினை காப்பது அவசியம் என்று கூறியுள்ளார். இதே போன்று இந்தியாவின் பெயரை பாரத் என்பதற்குப் பதில் பாரதம் என்று மாற்றம் செய்தால் நம் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் விதமாக மக்கள் மனதில் ஆழ்ந்து நிற்கும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இதற்கு முன்பு இதே போல் இந்தி திணிப்பின் போது ஒரு வட இந்தியப்  பத்திரிக்கை சத்குருவிடம்  கேள்வி கேட்டனர்.  அதற்கு அவர் தமிழ் ஒரு மொழி மட்டுமல்ல. அது ஒரு கலாச்சாரம், பண்பாடு, மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ள ஒரு மொழி.
அதே போல் தமிழ்நாட்டில் அவர்கள் தமிழ் மொழியைப் பேச மட்டுமல்ல அவர் உணர்விலும், சுவாசத்திலும், கலந்துள்ளனர். எனவே தமிழுடன் இவ்வளவு ஆழமாக இருக்கும் அவர்கள் மீது இந்த இந்தி திணிப்பு செயல்படாது என்று தமிழ் மக்களுக்கு ஆதரவாகப் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..

Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here