Home செய்திகள் இந்தியா பெட்ரோல் டீசல் விலை தொடர் ஏற்றம் : பொருளாதார சந்தையில் வீழ்ச்சி…

பெட்ரோல் டீசல் விலை தொடர் ஏற்றம் : பொருளாதார சந்தையில் வீழ்ச்சி…

325
0
oli bunks
Share

கொரோனா தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாடு பெருமளவு குறைந்தது. இதனால் பொருளாதாரச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத சரிவைச் சந்தித்தது.
ஆனால் அப்போதும் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் இருந்தது. இதனை எதிர்த்துப் பல தரப்பினர் கேள்வி எழுப்பியிருந்தனர்.
அதே போல் தற்போது ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்ட பிறகு பெட்ரோல் டீசல் பயன்பாடு அதிகரித்துள்ளது. பொருளாதார சந்தையிலும் கச்சா எண்ணெய் விலை ஏற்றம் காணப்பட்டது.
கடந்த ஒரு வாரங்களாக பெட்ரோல் டீசல் விலையில் சிறிது சிறிதாக உயர்வு ஏற்பட்டது. மேலும் கூட்டு வரியைத் தமிழக அரசு உயர்த்தி உள்ளது.  இதனால் பெட்ரோல் மீதான கூட்டு வரி 28லிருந்து 34 சதவீதமாக மாற்றப்பட்டது. அதே போல் டீசல் மீதும் 20லிருந்து 25 சதவீதமாக உயர்த்தப்பட்டது.
இது வரை கடந்த 9 நாட்களாக பெட்ரோல் மீது 3.26 ரூபாயும் டீசல் மீது 2.51 ரூபாயும் ஏறியுள்ளது. இன்றும் சிறிது பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில் பெட்ரோல் மீது 43 காசுகளும் டீசல் மீது 51 காசுகளும் லிட்டருக்கு உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து பெட்ரோல் 79.96 எனவும், டீசல் 72.69 எனவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here