Home செய்திகள் இந்தியா உலக அளவில் இந்தியா 4 -ஆம் இடம் ! கடந்த 24 மணி நேரத்தில் 11,458...

உலக அளவில் இந்தியா 4 -ஆம் இடம் ! கடந்த 24 மணி நேரத்தில் 11,458 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..

353
0
covid 19
Share

உலகம் முழுவதும் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இதனால் அனைத்து நாடுகளும் மிகுந்த உயிர் பயத்தில் உள்ளது. இந்த கொடிய நோய்க்கு இது வரை 7,758,639 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 43 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.
இதில் அமெரிக்கா மிகுந்த பாதிப்பைச் சந்தித்துள்ளது. ஏனென்றால் அமெரிக்காவில் மட்டும் இது வரை இந்த நோய்க்கு 22 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதில் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும் இங்கு தான் கொரோனா தாக்கம் அதிகம் நாடுகளில் பட்டியலில் முதல் இடத்திலும் உள்ளது.
அதே போல் கடந்த மார்ச் மாதத்தில் இந்தியாவில் புகுந்த கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதன் தாக்கம் ஆரம்பத்தில் குறைவாகத்தான் இருந்தது. பின்னர் படிப்படியாக அதன் எண்ணிக்கை ஏறிக்கொண்டே இருந்தது. பின்பு பொருளாதார நெருக்கடி காரணமாக பல்வேறு தளர்வுகளும்  அளிக்கப்பட்டன.
இதனால் தற்போது கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து தற்போது உலக அளவில் 4-ம் இடத்தில் உள்ளது இந்தியா. இதில் இதுவரை 3,10,156 பேர் கொரோனா வைரஸ் நோய்க்குப் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 8895 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 11,458 பேர் இந்த கொரோனா  வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவே இத்தனை நாட்களில் பதிவான அதிக எண்ணிக்கை ஆகும்.

Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here