Home செய்திகள் இந்தியா microsoft-ல் வேலைவாய்ப்பா ? IT ஊழியர்களுக்கு நல்ல செய்தி..

microsoft-ல் வேலைவாய்ப்பா ? IT ஊழியர்களுக்கு நல்ல செய்தி..

353
0
microsoft
Share

கொரோனா வைரஸ் காரணமாக அனைத்து தொழில் துறையும் மிகப்பெரிய அளவில் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துள்ளது. அதிலும் IT  துறை பலத்த அடிவாங்கியுள்ளது.
MNC நிறுவனம் முதல் ஸ்டார்ட் அப் வரை  அனைத்து நிறுவனங்களும் தங்கள் நெருக்கடியைச் சமாளிக்க ஏராளமான  நிறுவனங்கள் சம்பள குறைப்பு,  ஊழியர்கள் குறைப்பு, புதிய பணியமர்தல் நிறுத்தம் என பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கின்றன.
இத்தகைய சூழலில் microsoft புதிய ஊழியர்களை பணியமர்த்த உள்ளதாகக் கூறி அனைத்து IT ஊழியர்களுக்கும் இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளது. ஆம் இந்தியாவில் ஏற்கனவே  உள்ள நிறுவனத்தை விரிவுபடுத்தும் புதிய திட்டத்தையும், முதலீடு செய்ய உள்ள அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.
இது குறித்து இந்தியாவின் microsoft தலைவர் ஆனந்த் மகேஸ்வரி TOI க்கு தெரிவித்திருப்பது : microsoft நிறுவனம் இந்தியாவில் தங்கள்   பணிகளை விரிவுபடுத்திப் பராமரிக்கும்  நோக்கம் உள்ளது. அதே போல் தொடர்ந்து எங்கள் முதலீடுகளை டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் செலுத்த உள்ளோம். மேலும் தரவுகள் மற்றும் கிளொவ்ட் துறையில் முன்னணி நிறுவனமாக இருக்க விரும்புகிறோம். எனவே ஏற்கனவே உள்ள மூன்று  மையங்களை மேலும் விரிவாக்கம் செய்ய விரும்புவதாகக் கூறினார்.
உள்நாட்டில் பெருமளவு தரவுகளைக் கொண்டுள்ளதால் இந்த முடிவை எடுத்துள்ளோம். இந்த கொரோனா காலத்திலும்  நாங்கள் சேவையைச் சிறப்பாகச் செய்தோம். இதுபோல் வாடிக்கையாளர்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு தரவுகளைச் சேமிக்கும் திட்டத்தில் தொடர்ந்து சேவையை மேம்படுத்துவோம் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த டிஜிட்டல் சேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது போலவே ஏராளமான போலி மோசடிகளும்,அச்சுறுத்தல்களும் அதிகரிக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
எதுவானாலும் IT ஊழியர்கள் பொறுத்தவரை இது அவர்களுக்கு ஒரு புத்துணர்ச்சி ஊட்டும் செய்தியே. ஏராளமான நிறுவனங்கள் பணி நீக்கம் செய்தாலும் microsoft விரிவுபடுத்தும் செய்தியால், அதில் பல்லாயிரக்கணக்கான வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here