Home செய்திகள் இந்தியா திருப்பதி ஏழுமலையான் கோவில் திறப்பு ! தமிழக பக்தர்களை அனுமதிக்க சில விதிமுறைகள்..

திருப்பதி ஏழுமலையான் கோவில் திறப்பு ! தமிழக பக்தர்களை அனுமதிக்க சில விதிமுறைகள்..

446
0
Tirupati
Share

கொரோனவால் ஏற்பட்ட ஊரடங்கிற்குப் பிறகு மத்திய அரசும் மாநில அரசும் அறிவித்துள்ள பல்வேறு தளர்வுகளுக்குப் பிறகு இன்று முதல் வழிபாட்டுத் தளங்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து திருப்பதி  ஏழுமலையான் கோவில் இன்று திறக்கப்பட்டது.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கையைத் தேவஸ்தானமும் தற்போது மேற்கொண்டுள்ளது. அதில் முதல் நடவடிக்கையாகப் பரிசோதனை ஓட்டமாகத் தேவஸ்தான பணியாளர்களைத் தரிசனம் செய்ய அனுமதித்தனர்.
பின்பு நாளை உள்ளூர் மக்களுக்கு  அனுமதியளிக்கப்பட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து வெளியூர்களுக்கு,வெளி மாநிலத்தவர்களுக்கும் தரிசனம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  தமிழகம்,கர்நாடக போன்ற வெளி மாநிலத்தவர்கள் இ – பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அலிபிரி அருகே ஒரு சோதனை சாவடி அமைக்கப்பட்டு அங்கு வரும் பக்தர்களின் உடல் வெப்ப நிலையைக் கண்காணிக்க  அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மத்திய அரசின் அறிவுறுத்தலின் படி மூத்த குடிமக்கள், கர்ப்பிணிகள், மற்றும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை முற்றிலும் அனுமதிக்கப்படாது என்று அறிவித்துள்ளது. மணிக்கு 500 பேர் வீதம் ஒரு நாளைக்கு 6000 பக்தர்களுக்கு அனுமதி வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அதில் 3000 பேர் கட்டண தரிசனமாகவும், அடுத்த 3000 பேர் தர்ம தரிசனமாகவும் அனுமதிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மொட்டை அடிக்க அனுமதி இல்லை. மேலும் லட்டு வாங்க சமூக இடைவெளியை கடைப்பிடிக்க 6 மீட்டர் இடைவெளிவிட்டு  ரேடியம் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது.
அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கும் இடங்களில் காலால் இயக்கும் வகையில் தண்ணீர் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளது. மகா உண்டியல் வழிபடும் முன் அனைத்து பக்தர்களும் கிருமி நாசினியுடன் கைகளைச்
சுத்தம் செய்து கொண்டு தரிசனம் செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் அனைத்து பக்தர்களும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ரெட் சோன் எனப்படும் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள இடங்களிலிருந்து வரும் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் தரிசனம் நேரத்தையும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை என நிர்ணயித்துள்ளது.

Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here