Home செய்திகள் இந்தியா Master படம் amazon OTT -ல் வெளியீடா ? அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்…

Master படம் amazon OTT -ல் வெளியீடா ? அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்…

649
0
master
Share

தளபதி விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான படம் தான் Master.இந்த படம் தொடங்கிய முதலே மிகுந்த எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியிலும், தமிழ் திரையுலகத்திலும் ஏற்படுத்தியது. இதில் கதாநாயகியாக மாளவிகா மோகன் நடித்துள்ளார். மேலும் முன்னணி நடிகர்களான நாசர்,சாந்தனு முக்கிய கதாபாத்திரம் வகிக்கின்றனர். வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார்.
இந்த படம் XB Film creators தயாரித்துள்ளனர். இந்த படம் சென்ற ஏப்ரல் 14-ம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என 5 மொழிகளில் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் கொரோனா பரவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட ஊரடங்கின் காரணமாகத் திரையரங்குகள் திறக்க அனுமதிக்கப்படவில்லை. எனவே Master படம் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது. ஆயினும் அதன் விற்பனை புதுப்புது சாதனைகளைப் படைத்துக் கொண்டுள்ளது.
master
தற்போது amazon prime உரிமம் 15 கோடிக்கு வாங்கியுள்ளது. இதற்கு முன் கடந்த ஆண்டு வெளியாகி block buster ஹிட் அடித்த பிகில்  திரைப்படம் 15 கோடிக்கு வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ரிலீசுக்கு முன்பே OTT படமாகத் தர விரும்பினால் 175 கோடி ரூபாய் வரை தரத் தயாராக இருப்பதாகவும் தகவல் வந்துள்ளது.
இதற்கு முன்பு ஜோதிகா நடிப்பில் பொன்மகள் வந்தால் என்ற படம் நேரடி OTT  -யாக வெளியானது. அதே போல் விஜய் சேதுபதி நடித்துள்ள படத்திற்கும் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.
இதனை அறிந்த விஜய் ரசிகர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். ஏனென்றால் OTT மூலம் படம் பார்த்தால் திரைக்குச் சென்று களிக்கும் கொண்டாட்டம் இருக்காது என வருத்தம் தெரிவித்துள்ளனர். இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியாகாததால் சற்று நம்பிக்கையுடன் உள்ளனர்.

Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here