Home செய்திகள் இந்தியா ஓட்டல், வழிபாட்டுத் தலங்கள், மால்களில் திறப்பு ! அதற்கான விதிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு..

ஓட்டல், வழிபாட்டுத் தலங்கள், மால்களில் திறப்பு ! அதற்கான விதிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு..

362
0
Central Government
Share

ஜூன் 8 முதல் அனைத்து ஓட்டல், வழிபாட்டுத் தலங்கள், மால்கலும்   திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அதில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் அனைத்தும் தற்போது மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
அதன்படி மால்களுக்கு வரும் வாடிக்கையாளர்களின்  முழு விவரமும் பதிவு செய்வது, வழிபாட்டுத் தலங்களில் ஸ்வாமி சிலைகளைத் தொடக்கூடாது  என சில முக்கிய விதிகள் கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
Templeமத்திய  அரசு வெளியிட்டுள்ள  அனைத்து தளர்வுகளும், விதிமுறைகளும் நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குப் பொருந்தாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மால்கள், ஓட்டல்கள், வழிபாட்டுத் தலங்களில் வெப்பநிலை அளவிடும் கருவியைப் பயன்படுத்திக் காய்ச்சல்  சோதனை கட்டாயம் நடத்த வேண்டும். இருப்பினும், திரையரங்குகள், விளையாட்டு அரங்கங்கள், நீச்சல் குளம், சிறுவர்களுக்கான கேளிக்கை பூங்காக்கள் உள்ளிட்டவை பூட்டியே இருக்கும்.
மால்களில் 6 அடி தூரத்திற்கு சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அடிக்கடி தொடப்படும் கதவுகள், கைகழுவும் பகுதி ஆகியவற்றைத் தொடர்ந்து கிருமி நாசினி தெளித்து தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.
உணவு விடுதிகளில் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே நிரப்பப்பட வேண்டும். முடிந்தவரை உணவை பார்சலாக கொண்டு செல்வதற்குத் தான் உணவகங்கள் அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.
உணவை நேரடியாக டெலிவரி செய்வோர் ஒவ்வொரு டெலிவரிக்கு முன்பும் வெப்பநிலை மானி கொண்டு சோதனை செய்து கொள்ள வேண்டும்.
மால்கள், அலுவலகங்களில் ஏ.சி.யை 24 முதல் 30 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பத்தில் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
பாதிப்பு எளிதில் பரவ வாய்ப்புள்ளதாகக் கருதப்படுவோர், கர்ப்பிணிகள், மூத்த குடிமக்கள் ஆகியோர் மீது அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும். குறிப்பாக டிஜிட்டல் முறையில் மட்டும் பணப்பரிவர்த்தனை  செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
ஓட்டல்களில் வாடிக்கையாளர்களின் பயண குறிப்பேட்டைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். பயணிகளின் லக்கேஜ்கள்  கிருமி நாசினி பயன்படுத்திச் சுத்தப்படுத்த வேண்டும்.
ஸ்மார்ட் போன் வைத்திருக்கும் அனைவரும் கட்டாயம் ஆரோக்ய சேது ஆப்பை பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here