Home முகப்பு ட்ரெண்டிங் செய்திகள்  பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்தத் தடை விதித்தது சென்னை உயர் நீதிமன்றம்

 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்தத் தடை விதித்தது சென்னை உயர் நீதிமன்றம்

299
0
high court
Share

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை ஒத்திவைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு: கொரோனா தாக்கம் குறையும் வரை பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்தத் தடை  விதித்தது உயர் நீதிமன்றம்.ஏனென்றால் கொரோனா பரவலைத் தடுக்க பள்ளி, கல்லூரிகளை மூட தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. இத்தகைய சூழலில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வை நடந்த ஏன் ஆவல் காட்டுகிறது. இந்த பொதுத் தேர்வை நடத்தினால் 9 லட்சம் மாணவர்கள் மற்றும் 2 லட்சம் ஆசிரியர்கள் உட்படுத்த பட வேண்டி இருக்கும்.
தற்போது நாளுக்கு நாள் தமிழகத்தில் கொரோனா தாக்குதல் அதிகரித்துக் கொண்டுள்ளது எனவே ஏன் இந்த பேராபத்தைக் கையாள நினைக்கிறீர்கள். லட்சக்கணக்கானோர் உடல் நலனில் அக்கறை இல்லையா எனப் பல கேள்விகள் எழுப்பப்பட்டது. பின்பு சிறிது கால அவகாசம் அளித்தது.
அதன் பிறகு பதிலளித்த தமிழக அரசு தரப்பினர் 10-ம் வகுப்பு மதிப்பெண் என்பது மிக முக்கியமானது. மேலும் அனைத்து மாநிலங்களிலும் கிட்டத்தட்டத் தேர்வு நடத்தி முடித்து விட்டனர். இப்போது விட்டால் மீண்டும் கொரோனா பாதிப்பு பெருகும் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள். எனவே நாங்கள் நோய் பரவாமல் இருக்க பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டது என வாதாடினார்.
பிறகு இதுகுறித்து விரிவான மனுவைத் தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியது. மேலும் இந்த வழக்கை வரும் ஜூன் 11-ம் தேதி ஒத்திவைத்துள்ளது. பத்தாம் வகுப்புத் தேர்வு நடத்தலாமா எனப் பெற்றோர்களும் சிந்தித்துப் பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
அதேபோல் ஜூன் 15-ல் தேர்வை நடத்த அனுமதிக்க முடியாது என்றும் நீதிமன்றம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here