Home செய்திகள் இந்தியா நாளை முதல் ஊட்டி மலை ரெயில் சேவை தொடக்கம்..

நாளை முதல் ஊட்டி மலை ரெயில் சேவை தொடக்கம்..

477
0
Share

கொரோனா பரவலை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் கடந்த மார்ச் மாதம் 20-ந் தேதி முதல் நீலகிரி மாவட்டத்தில் மலை ரெயில் பாதை இயக்கம் ரத்து செய்யப்பட்டது. ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகும் நீலகிரியில் இன்னும் இயல்புநிலை திரும்பவில்லை.

தற்போது ஒரு மாதமாக பூங்காக்கள் சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டு உள்ளது. இ-பாஸ் நடைமுறையில் சுற்றுலா பயணிகள் அனைத்து இடங்களிலும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் மலை ரெயிலில் பயணிக்க ஆர்வம் காட்டுகின்றனர்.

எனவே கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் குன்னூர்-ஊட்டி இடையே மலை ரெயிலை இயக்க நீலகிரி கலெக்டர் அனுமதிஅளித்துள்ளார். அதனை தொடர்ந்து நாளை (சனிக்கிழமை) முதல் மலைபாதை ரெயில் சேவை இயக்கப்பட உள்ளது.

இந்த ரெயில் சேவை குன்னூர் ரெயில் நிலையத்தில் இருந்து காலை 7.45 மணிக்கு புறப்பட்டு கேத்தி, லவ்டேல் வழியாக 9 மணிக்கு ஊட்டியை வந்தடையும். இதே போல் ஊட்டியிலிருந்து 9.15 மணிக்கு புறப்பட்டு 10.25 மணிக்கு குன்னூரை சென்றடையும்.

குன்னூரில் இருந்து மதியம் 12.35 மணிக்கு புறப்பட்டு ஊட்டியை 1.50 மணிக்கு வந்தடையும். தொடர்ந்து ஊட்டியிலிருந்து 2 மணிக்கு புறப்பட்டு குன்னூரை மாலை 3.10 மணிக்கு சென்றடையும்.

மாலை 4 மணிக்கு குன்னூரில் இருந்து புறப்பட்டு 5.15 மணிக்கு ஊட்டியை வந்தடையும். ஊட்டியிலிருந்து 5.30 மணிக்கு புறப்பட்டு 6.40 மணிக்கு குன்னூரை சென்றடையும். நீலகிரியில் மலை ரெயிலில் பயணித்தால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைகின்றனர் என்று இந்த சேவையை தொடங்கி இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை -சக்தி காந்ததாஸ்

இந்த மலை ரெயில் சேவையை சுற்றுலா பயணிகள் பயன்படுத்தி கொள்ளலாம். மத்திய மாநில அரசுகள் தெரிவித்துள்ள சமூக இடைவெளியை கடைபிடிப்பது, முகக்கவசம் அணிவது கட்டாயம் பின்பற்ற வேண்டும். முழுபாதுகாப்பு வழிமுறைகளுடன் நாளை முதல் குன்னூர்-ஊட்டி இடையே மலை ரயில் போக்குவரத்து சேவை தினமும் இயக்கப்படவுள்ளது. ஊட்டி-மேட்டுப்பாளையம் இடையே மலை ரெயில் இயக்குவது குறித்து இன்னும் எந்தவித அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. இந்த தகவலை தென்னக ரெயில்வே தெரிவித்து உள்ளது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here