Home செய்திகள் இந்தியா குழப்பம் நிறைந்த சபரி மலை பயணம் !

குழப்பம் நிறைந்த சபரி மலை பயணம் !

423
0
Share

ஒவ்வொரு ஆண்டும் சபரிமலை அய்யப்பன் கோவிலில் மகர விளக்கு பூஜைக்கு பக்தர்கள் செல்வது வழக்கம். இந்த ஆண்டு கொரோனோ தொற்று காரணமாக மார்ச் மாதம் முதல் கோவில்கள் திறக்கப்படாமல் ஊரடங்கு உத்தரவு காரணமாக மூடப்பட்டிருந்தது. சபரிமலை கோவிலுக்கு மாத மாதம் குறிப்பிட்ட சில தினங்கள் கோவில் திறக்கப்பட்டு பூஜை செய்யப்படும்.

தற்போது மகரவிளக்கு பூஜை காரணமாக பக்தர்கள் அதிகம் வருவார்கள் என்பதால் கேரள அரசு ஏராளமான சட்ட திட்டங்களை வழி வகுத்துள்ளது.

கொரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழுடன் வந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று கேரள அரசு அறிவித்திருந்தது. ஐப்பசி மாத பூஜைக்காக திறக்கப்படும் நாட்களின் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என்று தேவசம் போர்டு தெரிவித்திருந்தது. இதற்கு சுகாதாரத்துறை எதிர்ப்பு தெரிவித்து இருந்தது. இந்த பிரச்சனைக்கு தற்போது கேரள முதல்வர் பினராயி விஜயன் மந்திரிசபை கூட்டத்தில் முடிவெடுத்தார்.

நாளை முதல் ஊட்டி மலை ரெயில் சேவை தொடக்கம்..

தினசரி 250 பக்தர்கள் ஐப்பசி மாத தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். வருபவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்த சான்றிதழ் கொண்டு வர வேண்டும். அது மட்டுமில்லாமல் மற்ற கோவில்களிலும் பக்தர்கள் தரிசனத்திற்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்று தெரிவித்தார்..


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here