Home செய்திகள் இந்தியா வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை -சக்தி காந்ததாஸ்..

வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை -சக்தி காந்ததாஸ்..

328
0
Rbi sakthi kandha dass
Share

நடப்பு நிதியாண்டுக்கான நிதி கொள்கை கூட்டத்தில் உறுப்பினர்களின் முடிவால் ரெப்போ வட்டி விகிதம் மாற்றமின்றி 4% ஆக தொடர்ந்து தொடரும் என முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த முடிவை ரிசெர்வ் வங்கி கவர்ணர் சக்தி கந்ததாஸ் அறிவித்தார்.

ரெப்போ வட்டி விகிதம் என்பது ரிசர்வ் வங்கி மூலம் பிற வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான வட்டி விகிதம். இந்த ரெப்போ விகிதம் குறைந்தால் வீட்டு கடன் உள்ளிட்டவற்றில் வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் வழங்கும் கடனுக்கான வட்டி விகிதமும் குறையும்.

இது குறித்து இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் வெளியிட்டு உள்ள செய்தியில் கூறியிருப்பதாவது :

நிதி கொள்கை கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதம் மாற்றமின்றி 4% ஆக நீடிப்பது என ஒருமித்த முடிவு எடுக்கப்பட்டது. இதற்கு ஆதரவாக கூட்டத்தில் இருந்த அனைவரும் வாக்களிதனர்.

1 வருட அமேசான் சந்தா இலவசம் ! ஏர்டெல் புதிய ரீசார்ஜ் திட்டம்

மேலும் நடப்பு நிதியாண்டு மற்றும் அடுத்த ஆண்டு வரையில் தேவைப்பட்டால், நடப்பிலுள்ள நிதி கொள்கை நிலைப்பாட்டை தொடருவது என்று நிதி கொள்கை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. வங்கி வட்டி விகிதம் மாற்றமின்றி 4.2% ஆகவும், ரிவர்ஸ் ரெப்போ விகிதம் மாற்றமின்றி 3.35% ஆகவும் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

2021 ஆண்டு பணவீக்கம் செப்டம்பரில் தொடர்ந்து உயரும் என ஆய்வு செய்யப்பட்டு உள்ளது. ஆனால், 3வது மற்றும் 4வது காலாண்டில் இலக்கை நோக்கி பணவீக்கம் மெல்ல நகர கூடும் என்றும் எங்களுடைய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here