Home செய்திகள் இந்தியா 3 நாளில் திரும்புவதாக இருந்தால் குவாரண்டைன் கிடையாது!.. வெளிமாநிலத்தவர்க்கு சலுகை!…

3 நாளில் திரும்புவதாக இருந்தால் குவாரண்டைன் கிடையாது!.. வெளிமாநிலத்தவர்க்கு சலுகை!…

346
0
Quarantine
Share

3 நாளில் திரும்புவதாக இருந்தால் குவாரண்டைன் கிடையாது தமிழகத்துக்கு வணிக நோக்கமாக வரும் வணிகர்களுக்கு உடனடியாக இபாஸ் வழங்கப்படும் என்றும் அதே நேரத்தில் அவர்கள் மூன்று நாட்களில் தங்கள் சொந்த மாநிலத்துக்கு திரும்புவதாக இருந்தால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட மாட்டார்கள் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக இபாஸ் நடைமுறை இன்னும் தமிழகத்தில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இபாஸ் நடைமுறையில் அவ்வப்போது சில தளர்வுகளை அளித்து வருகிறது சமீபத்தில் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் கிடைக்கும் என தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில் தற்போது வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு சில சலுகைகளை அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் இ – பாஸ் இல்லையா ! இன்று முக்கிய ஆலோசனை..

இதுகுறித்து தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா என்ற அவர் வெளியிட்ட அறிக்கையில் ’வெளி மாநிலங்களிலிருந்து வணிக நோக்கத்திற்காக தமிழகம் வருபவர்கள் 72 மணி நேரம் மட்டுமே தங்குவதாக இருந்தால் அதாவது 3 நாட்கள் மட்டும் தங்குவதாக இருந்தால் அவர்களுக்கு இபாஸ் வழங்கப்படும் என்றும் அவர்களுக்கு தனிமைப்படுத்துதல் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதனால் வெளி மாநிலங்களில் இருந்து வணிக நோக்கத்திற்காக வரும் நபர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொழில் துறையினரின் முன்னேற்றத்துக்காக இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது என்றும் அதுல்ய மிஸ்ரா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதனால் கடந்த ஐந்து மாதங்களாக முடங்கியிருந்த தொழில் மீண்டும் எழுச்சி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here