Home செய்திகள் இந்தியா கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் இறுதி செமஸ்டர் தேர்வுகளை நடத்தலாம்: உச்சநீதிமன்றம் அனுமதி!..

கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் இறுதி செமஸ்டர் தேர்வுகளை நடத்தலாம்: உச்சநீதிமன்றம் அனுமதி!..

332
0
supreme court
Share

இறுதி செமஸ்டர் தேர்வு எழுதாமல் மாணவர்களுக்கு பதவி உயர்வு வழங்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. வழக்கமான வகுப்புகள், தேர்வுகள் போன்ற கல்வி சார்ந்த நடவடிக்கைகள் ஸ்தம்பித்துள்ளன. பல மாநிலங்கள் பள்ளி பொதுத்தேர்வுகளை ரத்து செய்துவிட்டன.

இதேபோல், கல்லூரி தேர்வுகளையும் ரத்து செய்து, அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்துவிட்டன. ஆனால் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் படிக்கும் இறுதியாண்டு மாணவர்களையும் தேர்வு எழுதாமல் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க முடியாது என்று யுஜிசி அறிவித்தது.

கொரோனா பரவல் மற்றும் வடமாநிலங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள பெருக்கு உள்ளிட்ட காரணங்களால் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும் என பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 31 மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுவின் மீதான விசாரணைகள் ஏற்கனவே நடைபெற்று முடிந்த நிலையில், இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இன்று அதற்கான தீர்ப்பை வழங்கியுள்ளனர். அதில் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் இறுதி செமஸ்டர் தேர்வுகளை நடத்தலாம் என உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மேலும் தேர்வு எழுதாமல் மாணவர்களுக்கு பதவி உயர்வு வழங்க முடியாது எனவும் நீதிமன்றம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

மாணவர்களை ஊக்குவிக்க கல்லூரிகளில் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என கூறியுள்ள உச்சநீதிமன்றம், பேரழிவு மேலாண்மை சட்டத்தின் கீழ் மாநிலங்கள் தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு தேர்வுகளை ஒத்திவைக்க முடியும் என்றும் தேதிகளை சரிசெய்ய யுஜிசியை அணுகலாம் என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here