Home செய்திகள் இந்தியா தமிழகத்தைச் சேர்ந்த 9ஆம் வகுப்பு மாணவர் கூகுள் ப்ளே ஸ்டோரில் புதிய செயலியைச்...

தமிழகத்தைச் சேர்ந்த 9ஆம் வகுப்பு மாணவர் கூகுள் ப்ளே ஸ்டோரில் புதிய செயலியைச் சேர்த்துள்ளார்.

485
0
Share

திண்டுக்கல் மாவட்டம் தாமரைப்பாடி சேர்ந்த மாரிமுத்து – நாகலட்சுமி இவர்களது மகன் பிரனேஷ். இவர் திண்டுக்கல்லில் ஒரு தனியார்ப் பள்ளியில் 9ஆம் வகுப்பு படிக்கிறார். 5ஆம் வகுப்பு முதல் கம்ப்யூட்டர் படிப்பும் ஒரு பக்கம் படித்து வருகிறார். தற்போது இவர் ஜெட் லைவ் சாட் (jet live chat ) எனும் புதிய செயலியை உருவாக்கி கூகுளில் இணைக்க விண்ணப்பித்தார். கூகுள் பிளே ஸ்டோரும் பரிசீலனைக்குப் பிறகு தற்போது இணைத்துள்ளனர்.

இந்தியா முழுவதும் திருப்பதி ஏழுமலையான் கோவில்…

இந்த செயலி குறித்து பிரனேஷ் கூறியதாவது :
நான் படித்த கம்ப்யூட்டர் படிப்பைக் கொண்டு இரு வாரங்களாகத் தொடர் முயற்சியில் இந்த செயலியை உருவாக்கி உள்ளேன். இந்த செயலியின் சிறப்பம்சமாக ஆடியோ, வீடியோ போன்ற அழைப்புகளையும் மேற்கொள்ளலாம். மேலும் பெரிய அளவு கொண்ட கோப்புகளையும் மிக எளிதில் பரிமாற்றம் செய்து கொள்ளலாம். எடுத்துக்காட்டாக முழு படத்தையும் இந்த செயலின் மூலம் பரிமாறிக் கொள்ள முடியும்.

பேஸ்புக்கில் உள்ள லைக் போன்று இதிலும் ஏதேனும் கருத்து பதிவிடும் அம்சம் இணைக்கப்பட்டுள்ளது. இந்த செயலியை 2048 வரை கூகுள் ஒப்பந்தம் செய்துள்ளேன். ஆனால் இந்த செயலி தற்போது 2018 ஆண்டிற்குப் பிறகு வெளிவந்த மொபைல் போனில் மட்டுமே செயல்படும். விரைவில் அனைத்து மொபைல் போன்களுக்கும் செயல்படும் வகையில் அப்டேட் வெளியிட உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here