Home செய்திகள் இந்தியா தமிழ்நாட்டில் இ – பாஸ் இல்லையா ! இன்று முக்கிய ஆலோசனை..

தமிழ்நாட்டில் இ – பாஸ் இல்லையா ! இன்று முக்கிய ஆலோசனை..

386
0
tamilnadu
Share

கொரோனா பரவத் தொடங்கிய பிறகு ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்திற்கும், வேறு மாநிலத்திற்குச் செல்வதற்குத் தமிழகத்தில் இ – பாஸ் நடைமுறைப் படுத்தப்பட்டது. இதன் மூலம் ஊரடங்கிற்கு சில முக்கிய நிகழ்வுகளுக்கு, மருத்துவச் சிகிச்சைகளுக்கும் விண்ணப்பித்து அதைப் பெற்ற பிறகு தான் ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்துக்கு, மாநிலத்திற்கும் செல்ல இயலும் என்று தமிழக அரசை அறிவித்திருந்தது.

அதன் பிறகு தற்போது இ – பாஸ் பெறுவதில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டது. இதன் மூலம் பெரும்பாலானோர் எளிதில் பெற்று வேறு இடத்திற்குச் செல்கின்றனர். ஏன் இந்த இ -பாஸ் நடைமுறை என்றால் ஒருவர் எந்த இடத்திலிருந்து வேறு இடத்திற்குச் செல்கிறார்கள் என்பதைக் கண்காணிக்க முடியும் என்ற காரணத்திற்காகத் தமிழக அரசு இன்றும் நடைமுறையில் வைத்துள்ளது.E-Pass on Tamilnadu Government

இதே போல் இனி பாஸ் நடைமுறையை விலக்கி விட்டால் கொரோனா பாதிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்வது மிகச் சவாலாக இருக்கும் என்று ஏற்கனவே சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்
தெரிவித்திருந்தார்.

உலகம் முழுவதும் ஜிமெயில் முடக்கம் ! காரணம் தெரியுமா ?

ஆனால் மத்திய அரசு இ – பாஸ் நடைமுறை அவசியம் இல்லை எந்த இடத்திற்கும் சென்று வரலாம் என்று அறிவித்துள்ளது. இந்த கருத்தை தற்போது தமிழக அரசு கருத்தில் கொண்டு இன்று மதியம் 3 மணியளவில் தலைமைச் செயலருடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here