Home செய்திகள் இந்தியா வேண்டாம்.. எல்லை மீறி போறீங்க!.. கைலாஷ் மானசரோவரில் சீனா ஏவுகணை தளம்!…

வேண்டாம்.. எல்லை மீறி போறீங்க!.. கைலாஷ் மானசரோவரில் சீனா ஏவுகணை தளம்!…

406
0
Kailash Manasarovar
Share

சமீப காலமாக இந்திய எல்லைக்குள் அடிக்கடி ஊடுறுவி வரும் சீன ராணுவம் இந்தியாவின் புனித தலமான மானசரோவரில் ஏவுகணை தளத்தை அமைத்திருப்பதாக வெளியாகியுள்ள செய்தி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில மாதங்கள் முன்பு இந்திய – சீன படைகளிடையே லடாக் எல்லையில் நிகழ்ந்த மோதலில் இருதரப்பினரும் உயிரிழந்தனர். அதை தொடர்ந்து இந்தியா – சீனா இடையேயான மோதல் வலுப்பெற்று வருகிறது. இந்நிலையில் சில நாட்கள் முன்னர் பாங் ஜோ ஏரி அருகே சீன படைகள் அத்துமீறி நுழைய முயன்றபோது இந்திய ராணுவம் அவர்களை விரட்டியடித்துள்ளது.

பறக்கும் ஹெலிகாப்டரில் இருந்து தாக்கும் திறன் கொண்ட ஏவுகணை !

இந்நிலையில் நான்கு மதத்தை சேர்ந்தவர்களின் புனித தலமாக விளங்கும் கைலாஷ் – மானசரோவர் பகுதியின் அருகே உள்ள ஏரிக்கு அப்பால் சீனா ஏவுகணை தளம் அமைத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்து மத கடவுளான சிவன் – பார்வதி ஆகியோர் வாழும் இடமாக நம்பப்படும் கைலாஷ் மலைப்பகுதிக்கு ஆண்டுதோறும் ஏராளமான மக்கள் பயணம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் சீனா அந்த பகுதியில் ஏவுகணை தளம் அமைத்துள்ளது இந்தியாவை அச்சுறுத்தவும், அதன் மத நம்பிக்கைகளை அவமதிக்கவும் செய்யப்படும் செயலாக கருதப்படுகிறது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here