Home செய்திகள் இந்தியா முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார்…

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார்…

360
0
Share

உடல்நலக் குறைவு காரணமாக ஆகஸ்ட் 10ஆம் தேதி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த பிரணாப் முகர்ஜி இன்று காலமானார். இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவராக இருந்த பிரணாப் முகர்ஜி கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி மூளை அறுவை சிகிச்சை காரணமாக ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து அவருக்கு கொரோனா தொற்றும் உறுதி செய்யப்பட்டிருந்தது. இதனால் அவருடைய உடல்நிலை கடும் மோசமான நிலையை அடைந்தது. முன்னேற்றம் ஏதும் இல்லாததாக ராணுவ மருத்துவமனை நிர்வாகமும் தெரிவித்திருந்தது. அதன் தொடர்ச்சியாக தற்போது இன்று அவரது மகன் கனத்த மனதோடு அவர் இறந்ததாகத் தெரிவித்துள்ளார்.

உயர்வுடன் தொடங்கிய பங்குச் சந்தை கடும் சரிவு…

இவர் 2012 முதல் 2015 வரை இந்திய நாட்டின் ஜனாதிபதியாக இருந்தார். மேலும் இவர் இந்தியாவின் மிகப்பெரிய கௌரவிக்கும் விருதான பாரத ரத்னா விருதும் பெற்றுள்ளார்.

தற்போது இவரது மறைவுக்குப் பிரதமர் மோடி மற்றும் இன்றைய ஜனாதிபதியான ராம்நாத் கோவிந்த் உட்பட அனைத்து கட்சித் தலைவர்களும் இவர் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here