Home செய்திகள் இந்தியா தமிழகத்தில் முழு ஊரடங்கு இல்லை திட்டம் இல்லை ! உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டம்..

தமிழகத்தில் முழு ஊரடங்கு இல்லை திட்டம் இல்லை ! உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டம்..

345
0
high court
Share

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தவும் தடுக்கவும் நாடு முழுவதும் கடந்த மார்ச் 22 முதல் நான்கு கட்டங்களாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஜூன் 1 முதல் 5 -ம் கட்ட ஊரடங்கு தொடரப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதில் அன்லாக் – 1 என்று மத்திய அரசு சில தளர்வுகளை அளித்துள்ளது.
தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் எண்ணிக்கை காரணமாக மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என்று பல்வேறு வதந்திகள் பரவி வருகிறது. கடந்த சில தினங்களாக 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தமிழகத்தின் தலைநகரான சென்னையில் நாளுக்கு நாள் இந்த கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதனால் சற்று ஊரடங்கைக் கடுமை ஆக்கலாம் என்று பல்வேறு தகவல்கள் வெளியானது. இது தொடர்பாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று ( 11/6/2020 ) விசாரணை  நடைபெற்றது.
இதனை விசாரித்த நீதிபதிகள் வினித் கோத்தரி மற்றும் ஆர். சுரேஷ் குமார் ஆகியோர் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் ஊரடங்கு கடுமையாக்கப்படுமா ? இல்லை வேறு ஏதாவது திட்டம் உள்ளதா ?  நடைமுறையில் மாற்றம் ஏற்படுமா என்று கேள்வி எழுப்பினர். இது தொடர்பாகத் தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.
இதற்கு விளக்கம் அளித்த தமிழக அரசு ஊரடங்கு மீண்டும் அமல்படுத்தும் திட்டம் தற்போதைக்கு இல்லை அதே போல் சென்னையிலிருந்து வெளியூருக்கு இ – பாஸ் நிறுத்தப்பட்டுள்ளது என்று கூறுவதும் வதந்தியே. கொரோனா வைரஸ் அதிகம் உள்ள பகுதிகளில் மருத்துவ குழுவினர் மூலம் தீவிர பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதேபோல் அனைத்து முடிவுகளும் மருத்துவக் குழுவினரின் பரிந்துரையின் அடிப்படையில் மட்டுமே எடுத்து வருகிறோம் என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது. பின்பு உயர் நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 15-ம் தேதி ஒத்தி வைத்துள்ளது.

Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here