Home செய்திகள் உலகம் இங்கிலாந்தில் பங்குச்சந்தையிலிருந்து விலகிப் போன நிறுவனங்கள் மீண்டும் இணைந்தன! இதனால் தொழில்துறை மீண்டுள்ளது….

இங்கிலாந்தில் பங்குச்சந்தையிலிருந்து விலகிப் போன நிறுவனங்கள் மீண்டும் இணைந்தன! இதனால் தொழில்துறை மீண்டுள்ளது….

312
0
Jonhson
Britain's Prime Minister Boris Johnson speaks during a news conference on the ongoing situation with the coronavirus disease (COVID-19) in London, Britain March 16, 2020. Richard Pohle/Pool via REUTERS
Share

இங்கிலாந்தில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாகப் பங்குச்சந்தை வர்த்தகத்திலிருந்து பெரும்பாலான நிறுவனங்கள் விலகி இருந்தன. தற்போது மீண்டும் வர்த்தகத்தில் இணைந்துள்ளது இதனால் தொழில் செயல்பாடுகள் சற்று இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது.
உலகம் முழுவதும் மார்ச் மாதத்திலிருந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. இதனால் அனைத்து உள்நாட்டு வெளிநாட்டு வியாபாரம் வர்த்தகங்கள் முடங்கின.  சிறு நிறுவனம் முதல் பன்னாட்டு நிறுவனங்கள் வரை அனைத்து தொழில்களும் பாதிக்கப்பட்டு எந்த ஒரு செயல்பாடும் இன்றி தொழில் துறை இருளில் மூழ்கியது.
இதே போல் இங்கிலாந்தில் கொரோனா வைரசால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக 5-ல் 1 நிறுவனம் பங்குச் சந்தை வர்த்தகத்தை விட்டு தற்காலிகமாக விலகி நின்றன.
தற்போது இங்கிலாந்தில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் சில சிறு, குறு தொழில்கள் செயல்பாட்டில் உள்ளன. இந்த செயல்பாடு காரணங்களினால் மீண்டும் விலகி இருந்த நிறுவனங்கள் வர்த்தகத்தில் இணைந்து வருகிறது.
இது குறித்து அத்துறையைச் சார்ந்தவர்கள் கூறும் போது தற்போது 80 சதவீத நிறுவனங்கள் பங்குச் சந்தை வர்த்தகத்தில் உள்ளன. கடந்த இரண்டு வாரங்களில் விலகி இருந்த நிறுவனங்களில் சில சதவீதம் மீண்டும் இணைந்தனர். அதே போல் வரும் வாரங்களில் அனைத்து நிறுவனங்களும் மீண்டும் இணைந்து வர்த்தகம் ஆகும் என்று தெரிவித்துள்ளனர்.
இதற்கு முன்பு அனைத்து உற்பத்தி மற்றும் கட்டுமான துறை வேலைகளும் தொடங்க தளர்வுகள்  அளிக்கப்பட்டிருந்தது. அடுத்த மாதம் முதல் எல்லாவிதமான தொழில்களுக்கும் அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here