Home முகப்பு ட்ரெண்டிங் செய்திகள் புதிய தமிழக சுகாதாரத்துறை செயலாளர் நியமனம்  ! பீலா ராஜேஷ் பணியிட மாற்றம்

புதிய தமிழக சுகாதாரத்துறை செயலாளர் நியமனம்  ! பீலா ராஜேஷ் பணியிட மாற்றம்

410
0
Beelarajesh
Share

தமிழக சுகாதாரத் துறைச் செயலாளராக ராதாகிருஷ்ணன் மீண்டும் பொறுப்பேற்கிறார் பீலா ராஜேஷ் வணிகவரித் துறை செயலாளராக இடமாற்றம் செய்ய ஆணை வெளியாகியுள்ளது.
கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. இந்திய அளவில் கொரோனா பாதிப்பில்  தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. அதிலும் குறிப்பாகச் சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தாக்கம் வெகு வேகமாகப் பரவி உள்ளது.
இந்த கொரோனா வைரசைக் கட்டுப்படுத்தவும், அதன் பரவுதலைத் தடுக்கவும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். குறிப்பாகக் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர் ஆகிய இடங்களில் மண்டல வாரியாக பிரித்து அமைச்சர்கள் அமைத்து தீவிர பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
RadhaKrishnanஇந்நிலையில் தமிழக சுகாதாரத் துறைச் செயலாளராக இருந்த பீலா ராஜேஷ், தற்போது அதிரடி இடமாற்றம் செய்யப்பட்டார்.
ஆரம்பக் காலத்திலிருந்தே இரவு பகல் பாராமல் முழு வீச்சில் கொரோனா தடுப்பு பணியை மேற்கொண்டு வந்தார். ஆனால் தற்போது இவரை வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை செயலாளராக இடமாற்றம் செய்து நியமனம் செய்துள்ளனர்.
இவருக்குப் பதிலாக கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக இருந்த  ராதாகிருஷ்ணன் அவர்களை சுகாதாரத்துறை செயலாளராக நியமனம் செய்துள்ளனர்.
இதுவரை தமிழகத்தில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 38716 ஆகா உள்ளது. இதில் 20705 பேர் குணமடைந்துள்ளனர். ஆனால் 349 நோயாளிகள்  இந்நோயினால் உயிரிழந்துள்ளனர். இதில் சென்னையில் மட்டும் 27398 பேர் இந்நோய் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர்.

Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here