Home அறிவியல் விண்ணுக்கு மனிதர்களை அனுப்பும் பணி தாமதம் : ISRO தகவல்…

விண்ணுக்கு மனிதர்களை அனுப்பும் பணி தாமதம் : ISRO தகவல்…

356
0
isrogaganyan
Share

விண்ணுக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்துக்கு எடுக்கப்பட்ட சோதனை  முயற்சி சற்று தாமதமாகலாம் என்று ISROதெரிவித்துள்ளது.

 

ISRO எனும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ஏராளமான விண்வெளி முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதில் ஒரு முயற்சியாக மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் திட்டம் 2022 நிகழும் என்று அறிவித்திருந்தது.
அந்த திட்டத்திற்கு ககன்யான் என்று பெயரிட்டுள்ளது. அதற்கான முயற்சியில் சோதனை ஓட்டமாக முதலில் 2 வியோமித்ரா ரோபோக்களை அனுப்ப முடிவெடுத்தது. அதற்காக இந்தாண்டு இறுதியில் ஒரு விண்கலமும், அடுத்த ஆண்டு ஜூலையில் மற்றொன்றும் அனுப்ப உள்ளதாக முன்னர் தெரிவித்திருந்தனர்.ஆனால் இந்த சோதனை முயற்சி சற்று தாமதமாகலாம் என்று தற்போது தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக இஸ்ரோவின் மூத்த விஞ்ஞானிகள் தெரிவித்திருப்பது :
கொரோனா தாக்கத்தால் ஏற்படுத்தப்பட்ட ஊரடங்கினால் முதல் சோதனை விண்கலம் தயாரிக்கும் பணிகள் பாதியில் நின்றுவிட்டது. தற்போது மீண்டும் தொடங்கி உள்ளோம். ஆனால் திட்டமிட்ட காலம் தற்போது தவறியுள்ளதால் இந்த முடிவு எடுத்துள்ளோம். ஆனால் இது வெகு தாமதம் ஆகாது என்றும் தெரிவித்துள்ளார்.

Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here