Home முகப்பு ட்ரெண்டிங் செய்திகள் 10,11,12 பொதுத்தேர்வின் ஹால்டிக்கெட் வெளியீடு ! பள்ளி திறப்பு குறித்து செங்கோட்டையன் பதில்கள்…

10,11,12 பொதுத்தேர்வின் ஹால்டிக்கெட் வெளியீடு ! பள்ளி திறப்பு குறித்து செங்கோட்டையன் பதில்கள்…

548
0
senkottayan
Share

கொரோனாவால் மேற்கொள்ளப்பட்ட ஊரடங்கை அடுத்து தற்போது ஏராளமான தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதில் 10ம் வகுப்பு பொது தேர்வு குறித்து ஏராளமான சர்ச்சைகளும் வாதங்களும் கிளம்பியுள்ளது.
இன்று செய்தியாளர்களைச்  சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனிடம் பள்ளி திறப்பு, மற்றும் பொதுத்தேர்வுகள் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது.
அதற்கு அவர் தெரிவித்த பதில்கள் :
1. 10,11,12 ஆகிய வகுப்புகளுக்குத் திட்டமிட்டபடி தேர்வுகள் நடத்தப்படும். அதே போல் நடந்து முடிந்த 12 வகுப்பு பொதுத்தேர்வின் விடைத்தாள்கள் 40000 ஆசிரியர்களைக் கொண்டு விறுவிறுப்பாக நடந்துவருகிறது. விரைவில் தேர்வு முடிவுகள் குறித்து அறிவிப்புகள் வெளியாகும்.
2. 12ம் வகுப்பில் கொரோனா பரவலால் தேர்வு எழுத முடியாமல் போன சில மாணவர்களுக்கும் திட்டமிட்டபடி தேர்வுகள் நடைபெறும்.
3. ஒரு வகுப்பறையில் 10 மாணவர்கள் என சமூக இடைவெளியுடன் தேர்வு நடத்தப்படும்.
4. 10 வகுப்பு பொதுத்தேர்விற்கு பிறகே பள்ளி திறப்பது குறித்த முடிவுகள் எடுக்கப்படும்.
5. மேலும் இது தொடர்பாகப்  பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்களுடன் ஆலோசித்த பிறகே முடிவு செய்யப்படும் என்று கூறினார்.
DPIஅதே போல் 10, 11, 12ஆம் வகுப்புத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஹால்டிக்கெட் இணையதளத்தில் தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது. மாணவர்கள்  தங்களுக்கான ஹால்டிக்கெட்டை www.dge.tn.gov.in என்ற தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here