Home முகப்பு ட்ரெண்டிங் செய்திகள் அரசு பேருந்து இயக்கமா ? கட்டண உயர்வு விவரங்கள் …

அரசு பேருந்து இயக்கமா ? கட்டண உயர்வு விவரங்கள் …

575
0
Tamilnadu bus
Share

நாளையுடன் 4-ம் கட்ட ஊரடங்கு முடிவடைகிறது. அதனை அடுத்த ஊரடங்கு மேலும் நீடிக்கப்படுமா என்ற அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில் ஜூன்    1-ம் தேதி முதல் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் இல்லாத இடங்களில் பரவலாகப் பேருந்துகள் இயக்க உள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளது.
மேலும் கொரோனா பாதிப்பு அதிகம் இல்லாத இடங்களில் பேருந்துகள் அதிகளவு இயக்கவும்.கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள மாவட்டங்களில் மிகக் குறைந்த அளவு பேருந்துகளும் இயக்க உள்ளதாகப் போக்குவரத்துத் துறையிடம் இருந்து தகவல் வெளிவந்துள்ளது.
Bus depotஎனவே அனைத்து பணிமனைகளுக்கும் முன்கூட்டியே பேருந்துகள் பழுது பார்க்கப்பட்டு தயார் நிலையில் வைக்க அறிவுரை அளிக்கப்பட்டது.  இதனைத் தொடர்ந்து சென்னையில் உள்ள அனைத்து பணிமனைகளிலும்   பேருந்துகளைப் பழுது பார்க்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மேலும் இதேபோன்று விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளையும் தயார் நிலையில் வைத்துக் கொள்ளத் தேவையான பணிகள் அதிவேகமாக நடைபெற்று வருகிறது. அதேபோல் தொலைதூர பேருந்துகளில் அதிகபட்சம்  26 நபர்கள் மட்டுமே பயணிக்கும் வகையில் சில மாற்றங்களுடன் ஒவ்வொரு இருக்கைக்கும் எண் வழங்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் மட்டுமே பயணிகள் பேருந்தில் பயணிக்க அனுமதி அளிக்கப்படுவர்.
குறைவான பயணிகளைக் கொண்டு பேருந்தை இயக்க இருப்பதால் போக்குவரத்துத்துறைக்கு அதிக அளவில் நஷ்டம் ஏற்படும் அபாயம் உள்ளது என அதிகாரிகள் போக்குவரத்துத் துறை அமைச்சரிடம் தெரிவித்துள்ளனர். எனவே, விரைவில் போக்குவரத்து கட்டணம் அதிகரிக்கக் கூடிய வாய்ப்புகள் இருப்பதாகவும் அத்துறையினரால் கூறப்படுகிறது. ஆயினும் பேருந்து கட்டண உயர்வு என்பது அரசின் கொள்கை அடிப்படையில் எடுக்கப்படும் முடிவு என்பதால், அதை முதலமைச்சர் ஆலோசித்து முடிவெடுப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here