Home முகப்பு உலக செய்திகள் WHO இனி தேவையில்லை ? டிரம்ப் அதிரடி அறிவிப்பு …

WHO இனி தேவையில்லை ? டிரம்ப் அதிரடி அறிவிப்பு …

510
0
WHO Trumph
Share

எங்களுக்குத் தேவையான சீர்திருத்தங்களையும் நாங்கள் வைத்த கோரிக்கைகளையும் செய்யாத காரணத்தால் உலக சுகாதார அமைப்புடனான உறவை நாங்கள்  முறித்துக் கொள்ளப்போகிறோம் என டிரம்ப் தெரிவித்ததால் பரபரப்பு.
கொரோனா வைரஸ் பரவுதலை எதிர்த்துப் போராடுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியதால்  உலக சுகாதார மையத்துடன் உள்ள உறவை அமெரிக்கா முற்றிலும் துண்டித்துக்கொள்வதாக அதிபர் டோனால்ட் டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார்.US president
கொரோனா வைரஸ் பரவுதலுக்குச் சீனாவுடன் ஆதரவாகச் செயல்பட்டதாகக் கூறி, உலக சுகாதார அமைப்பிற்கு வழங்கி வந்த நிதியை நிறுத்துவதாக முதலில் அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப் அறிவித்தார்.
இதையடுத்து, ஜெனீவாவைத் தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் உலக சுகாதார மையம், சீனாவிற்குக்  கைப்பாவை போன்று செயல்பட்டது என்று குற்றச்சாட்டிய அதிபர் டிரம்ப், தொடர்ந்து, தேவையான முன்னேற்றங்களை எடுக்கத் தவறினால் நிதி முடக்கம் நிரந்தரமாகிவிடும் என்றும் கூறியுள்ளார்.
இந்தியா – சீனா எல்லை பிரச்சனையை சுமூகமாக பேசி டிரம்ப் தயார் !
தற்போது வெள்ளை மாளிகையிலிருந்து பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய டிரம்ப், நாங்கள் கோரிக்கை வைத்த மற்றும் எங்களுக்கு தேவையான சீர்திருத்தங்களைச் செய்யத் தவறிய காரணத்தால், உலக சுகாதார அமைப்புடனான எங்கள் உறவை முற்றிலுமாக நாங்கள் துண்டித்துக் கொள்ளப்போகிறோம்.
எனவே அவர்களுக்கு இனி நாங்கள் நிதி ஒதுக்க மாட்டோம். உலக சுகாதார மையத்திற்கு வழங்கப்படும் நிதியை நாங்கள் அப்படியே வேறு நாடுகளுக்கும், சில முக்கிய அவசர பொதுச் சுகாதாரத் தேவைகளுக்கும் பயன்படுத்த உள்ளோம்.
இந்த கொடிய வைரஸ் குறித்து சீனா உலகம் முழுவதும் கட்டாயம் பதிலளிக்க வேண்டும், அதில் நமக்குத் தேவையான வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும்.
உலக சுகாதார அமைப்புக்கு அமெரிக்கா இதுவரை மிகப்பெரிய பங்களிப்பை அளித்து வந்தது.மேலும்  கடந்த ஆண்டு மட்டும் 400 மில்லியன் டாலர் வரை நிதியுதவி வழங்கியது.
இதுவரை உலக சுகாதார அமைப்பின் வரவுசெலவில் அதிகமாக தன்னார்வு பங்களிப்புகள் மட்டுமே இருக்கிறது, அவை அனைத்து நாடுகளிலிருந்தும் மற்ற  நன்கொடையாளர்களிடமிருந்தும் அவர்கள் தேர்ந்தெடுத்த இடத்திற்கு நேரடியாகச் செல்கிறது.
ஆகவே, உறுப்பு நாடுகளின் “மதிப்பிடப்பட்ட பங்களிப்பில்”  உள்ள செலவினங்களின் மீது மட்டுமே உலக சுகாதார அமைப்பு அதனுடைய முழு கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளது, மேலும் அவை அவற்றில் உள்ள  பணம்  மற்றும் மக்கள் தொகை அடிப்படையில் கணக்கிடப்படுகின்றன.

Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here