Home டெக்னாலஜிஸ் AUTOMATION குவரன்டைனில் சிங்கம், புலிகளை  வீட்டிற்கே அழைத்து வரும் கூகுள்!

குவரன்டைனில் சிங்கம், புலிகளை  வீட்டிற்கே அழைத்து வரும் கூகுள்!

489
0
hologram
Share

குவரன்டைனில்  குழந்தைகளைக் குதூகலப்படுத்தச் சிங்கம், புலி, கரடி, ஆடு, ஓநாய், பென்குயின் எனப் பல விதமான விலங்குகளை  வீட்டுக்கே அழைத்து வர முடியும்.

குவாரன்டைனில் வீட்டில் அடைப்பட்டுக் இருப்பதாய் உணரும் குழந்தைகளைக் கூகுள் வெளியிட்டுள்ள புதிய தொழில்நுட்பம் மூலம் மகிழ்விக்க முடியும்.Hologram 3D

கொரோனா பரவுதல் கட்டுப்பாட்டிற்காகப் பல நாடுகளில்  ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பெரியவர்களுக்கே வீட்டுக்குள் முடங்கியிருப்பது மன உளைச்சலை அளிக்கும் இவ்வேளையில் வீட்டுக்குள்ளேயே இருக்கும் குழந்தைகளை மகிழ்விக்க புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியது கூகுள் நிறுவனம்.

கூகுள் 3D ஹோலோகிராம் தொழில்நுட்பம் மூலம் காட்டு  விலங்குகள் மட்டுமல்ல அணைத்து உயிரினமும்  வீட்டுக்குள் கொண்டு வர இயலும். இதன் மூலம் குழந்தைகளைக் குதூகலப்படுத்த முடியும். இந்த சமயத்தைப் பயன்படுத்தி பெற்றோர்களும் சிறிது நேரம் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாகப் பொழுது போக்க முடியும் என்றும்  தெரிவித்துள்ளது கூகுள் நிறுவனம்.Hologram

இந்த ஆப்ஷனைப் பயன்படுத்தி கூகுள் 3டி ஹோலோகிராமை உபயோகிக்கலாம்:

விடாமுயற்சி என்ற பெயருடன் செவ்வாய் கோளுக்குச் செல்லும் ரோவர். நாசா விண்கலத்தைச் செலுத்த முடிவு செய்துள்ளது…

1.உங்கள்மொபைல் மூலம் கூகுள் தளத்திற்கு சென்று ஏதாவது ஒரு விலங்கின் பெயரைப் பதிவிடுங்கள். உதாரணமாக, புலி எனத் தேடுகிறீர்கள் என்றால்

2.முதல்பக்கத்தில் விக்கிப்பீடியா விளக்கத்துக்குக் கீழ் புலியின் 3D படம் கொண்ட உருவம் இடம் பெற்றிருக்கும். அதன் அருகிலேயே View in 3D என்ற ஆப்ஷன் இருக்கும்.

3.உங்கள்மொபைல் திரையில் தெரியும் 3D  விலங்கின் புகைப்படத்தை உங்கள் விரல் அசைவுகளுக்கு ஏற்றார் போல் அசைக்க இயலும்.

4.View in your spaceஆப்ஷனைத்தேர்ந்தெடுத்தால்.

5.கூகுள்உங்களின் மொபைல் கேமிரா ஆக்சஸ் பெற்றுக் கொள்ளும்.

சிங்கம், புலி, கரடி, ஆடு, ஓநாய், பென்குயின் என பல  விதமான விலங்குகளை உங்கள் குழந்தைகளை மகிழ்விக்க  வீட்டுக்கே அழைத்து வர முடியும்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here