Home செய்திகள் இந்தியா சென்னை உள்பட 3 மாநகராட்சியில் காலை 6 மணி முதல் 9 மணி வரை முழு...

சென்னை உள்பட 3 மாநகராட்சியில் காலை 6 மணி முதல் 9 மணி வரை முழு ஊரடங்கு – முதல்வர் அதிரடி நடவடிக்கை…

496
0
lockdown
Share

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் மாநகராட்சிகளில் ஊரடங்கு உத்தரவு சற்று கடுமையாக்கப்படுவதாகத் தமிழக முதல்வர்  அறிவித்துள்ளார்.
இது குறித்து தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது, சென்னை, கோயம்புத்தூர், மதுரை ஆகிய 3 மாநகராட்சிகளில் 26.04.2020 காலை 6 மணி முதல் 29.04.2020 இரவு 9 மணி வரை முழு  ஊரடங்கு அமல்படுத்தப்படும்.
மேலும் சேலம் மற்றும் திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் 26.04.2020 முதல் 28.04.2020 இரவு 9 மணி வரை முழு  ஊரடங்கு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
chennaiஇந்த முழு ஊரடங்கில் எவையெல்லாம் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது :
மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவம் சார்ந்த பணிகள் தடையின்றி செயல்படும்.
அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளும் தலைமைச் செயலகம், சுகாதாரத்துறை, காவல்துறை, வருவாய், பேரிடர் மின்சாரம், ஆவின், உள்ளாட்சிகள், மின்சாரம், குடிநீர் வழங்கல் ஆகிய முக்கிய துறைகள் தேவையான பணியாளர்களுடன் செயல்படும்.
மத்திய அரசு அலுவலகங்களும் வங்கிகளும் அத்தியாவசிய பணிகளுக்கு 33 சதவிகித பணியாளர்களுடன்  செயல்படும்.
அம்மா உணவகங்கள், ஏடிஎம்.கள் செயல்பாட்டில் எந்த மாற்றமுமில்லை.
செல்போன் மூலம் ஆர்டர் செய்து வீடுகளுக்கு டெலிவரி செய்யும் உணவுக்கு அனுமதி.
முதியோர், மாற்றுத்திறனாளி, ஆதரவற்றோர் இல்லங்கள் மற்றும் முதியோருக்கு உதவி புரிவோர் ஆகியோருக்கு அனுமதி உண்டு.
ஆதரவற்றோருக்காக நடத்தப்படும் சமையல் கூடங்கள் தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும். ஏழைகளுக்கு உதவி செய்ய விரும்பும் தொண்டு நிறுவனங்கள் அரசின் உரிய அனுமதியுடன் செயல்படலாம்.
கோயம்பேடு போன்ற மொத்த காய்கறி சந்தைகள் உரிய விதிகளுக்கு உட்பட்டுச் செயல்படும்.
காய்கறி, பழங்களை விற்க நடமாடும் கடைகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும்.
மேற்கண்ட நாட்களில் ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்ட சில்லறைக் கடைகள், பிற கடைகள் எவற்றுக்கும் அனுமதி கிடையாது.
மேற்கண்ட பணிகளைத் தவிர, பிற பணிகளுக்கு முழுமையான தடை விதிக்கப்படுகிறது. பத்திரப்பதிவு அலுவலகம் உள்பட எந்த இதர அலுவலகமும் செயல்படாது.
 மேற்கண்ட மாநகராட்சிகளைத் தவிரப் பிற நகர, மாநகராட்சிகளில் ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் மற்றும் அனுமதிகள் தொடரும்.
இந்த கட்டுப்பாட்டு விதிகளின் படி ஊரடங்கு கடைப்பிடிக்க வேண்டும். இதனை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here