Home செய்திகள் இந்தியா WHO-விற்கு நிதியை முடக்கும் டிரம்ப் ! அள்ளி கொடுக்கும் சீனா…

WHO-விற்கு நிதியை முடக்கும் டிரம்ப் ! அள்ளி கொடுக்கும் சீனா…

720
0
Share

உலக சுகாதார அமைப்பு ( WHO ), கொரோனா விவகாரத்தில் ஒருதலைபட்சமாக நடந்து கொண்டது எனவும், சீனாவுக்கு ஆதரவாகச் செயல்பட்டுள்ளது என்றும் குற்றம் கூறி, அதற்கு தங்கள் அரசு சார்பில் ஒதுக்கும் நிதியை நிறுத்துவோம் என சில நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப். தற்போது சீன அரசு, உலக சுகாதார அமைப்பிற்கு கொரோனா வைரசை எதிர்த்துச் சிறப்பாகச் செயலாற்ற வேண்டும் என்பதற்காக  30 மில்லியன் டாலர் நிதியை ஒதுக்குவோம் என்று அறிவித்துள்ளது.
WHO Chinaஇதற்கு முன்பு சீன அரசு, உலக சுகாதார அமைப்பிற்கு 20 மில்லியன் டாலர் நிதியை வழங்க முடிவெடுத்திருந்தது. தற்போது அதனுடன் கூடுதலாக 30 மில்லியன் டாலர் சேர்த்து ஒதுக்கப்படும் எனவும், இதனைக் கொண்டு  உலக சுகாதார அமைப்பு, கொரோனா வைரசை எதிர்த்துத் திறம்படப் போராட என்றும், சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் கெங் ஷுவாங் தெரிவித்தார்.
மேலும், “இவ்வாறு செய்வதன் மூலம் உலக சுகாதார அமைப்பின் மீது சீன அரசு, கொண்டுள்ள நம்பிக்கை  மற்றும் ஆதரவை வெளிப்படுத்துகிறது” என்றும் கூறியுள்ளார்.
WHO Trumphஇதற்கு முன்பு உலக சுகாதார அமைப்பு குறித்து பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய டிரம்ப், “அமெரிக்கா, ஓராண்டிற்கு  WHO-க்கு 400 மில்லியன் முதல் 500 மில்லியன் டாலர் நிதியை வழங்குகிறது. ஆனால், சீனாவோ இதுவரை 40 மில்லியன் டாலர் மட்டுமே வழங்குகிறது. சில நேரங்களில் இந்த அளவு கூட ஒதுக்குவதில்லை.
இந்நிலையில் கொரோனா வைரஸ் விவகாரத்தில், அதன் வீரியம் மற்றும் தாக்கத்தைக் குறித்து உலகத்திற்குத் தெரிவிக்காமல் மறைத்துவிட்டது உலக சுகாதார அமைப்பு. கொரோனா வைரஸ் விவகாரத்தைச் சரியாகக்  கையாளவில்லை எனக் கூறி, WHO -விற்கு கொடுக்கும் நிதியை நிறுத்துவோம்  எனக் கூறி அதிர்ச்சி கொடுத்தார்.

Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here