Home செய்திகள் இந்தியா Infosys நிறுவனத்தில் சம்பள உயர்வு, பதவி உயர்வு நிறுத்தம் ! ஊழியர்கள் அதிர்ச்சி …

Infosys நிறுவனத்தில் சம்பள உயர்வு, பதவி உயர்வு நிறுத்தம் ! ஊழியர்கள் அதிர்ச்சி …

636
0
Infosys
Share

கொரோனா வைரஸ் பரவலால் எரிபொருள், தகவல் தொழில்நுட்பதுறை என முன்னணி நிறுவனங்கள் அனைத்தும் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளில் கோடிக்கணக்கானோர் வேலையிழந்துள்ளனர்.
Niranjan Royஇத்தகைய சூழ்நிலையில் தகவல் தொழில்நுட்பத்துறையில் முன்னணி நிறுவனமான Infosys CFO நிலஞ்சன் ராய் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
நோ புரோமோஷன், நோ சம்பள உயர்வு
இந்த கொரோனா பாதிப்பால் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு நிறுத்தி வைக்கப்படுவதுடன், புதிதாக வேலைக்கு ஆட்கள் சேர்ப்பதையும் நிறுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். அதே சமயம் இருக்கும் ஊழியர்களைப் பணி நீக்கம் செய்ய மாட்டோம் என்றும் 2021-ல் புதிதாக 35 ஆயிரம் நபர்களுக்கு வேலை வாய்ப்பளிப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலால் ஊழியர்களை உடனடியாக பணிக்குத் திரும்ப அழைக்க விருப்பமில்லை என்றும் நிலஞ்சன் ராய் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பால் அதிபர் டிரம்ப் மற்ற நாடுகளுக்கு வேலை வாய்ப்புக்கள் வழங்க முடியாது என்கிற அதிரடி முடிவால் IT உழியர்களுக்கு பெரும் அதிர்ச்சி சூழல் நிலவிவருகிறது. ஆய்வின் படி வேலை இல்லாத் திண்டாட்டம், அடுத்த ஆண்டு வரை நீடிக்க வாய்ப்பு உள்ளது என தகவல்.

Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here