Home செய்திகள் இந்தியா ZOOM APP-யை போலவே பல சிறப்பம்சங்களுடன் Facebook ! அப்படி என்ன வீடியோ கான்ஃபரன்ஸிங்கில் உள்ள வசதிகள் ?

ZOOM APP-யை போலவே பல சிறப்பம்சங்களுடன் Facebook ! அப்படி என்ன வீடியோ கான்ஃபரன்ஸிங்கில் உள்ள வசதிகள் ?

604
0
Messenger
Share

zoom போன்று மற்ற எந்த app-களும் இல்லை  இந்த சூழ்நிலையில் FACEBOOK தனது சாட்டிங் செயலியான Messenger-ல் வீடியோ காலிங் வசதிக்கான புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கினால் இதுவரை இல்லாத அளவிற்கு App கள் தரவிறக்கம் அதிகரித்துள்ளது.
WORK FROM HOME காரணத்தால் ஏராளமான IT ஊழியர்கள் Zoom போன்ற வீடியோ கான்ஃபரன்ஸிங் செயலி பல மில்லியன் பயனர்களைப் பெற்றுள்ளது. அதுமட்டும் இன்றி  நெட்பிளிக்ஸ் உள்ளிட்ட பொழுதுபோக்கு செயலிகளும் எக்கச்சக்க புதிய பயனர்களைப் பெற்றுள்ளன.Message
தற்போது சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு இதுபோன்ற சேவைகளுக்கு இருக்கும் தேவையை அறிந்து பல முன்னணி IT நிறுவனங்களும் தங்கள் சேவைகளைப் புதுப்பித்தும் பல புதிய சேவைகளை அறிமுகப்படுத்தியும் வருகின்றன. அதில் கூகுள் Hangouts செயலியை Google Meet எனப் பல புதிய வசதிகளுடன் வெளியிட்டுள்ளது.அது  Zoom-க்குப் போட்டியாக வந்து நின்றது. FACEBOOK தனது பொழுதுபோக்கு செயலியான Facebook Gaming செயலியைக் கடந்த வாரம் அறிமுகம் செய்தது. தற்போது facebook மற்றொரு சேவையுடன் களத்தில் இறங்கியுள்ளது.
Zoom APP பாதுகாப்பில் குறைபாடு இருக்கிறது எனப் பல்வேறு  நிறுவனங்களும் நாடுகளும் புறக்கணித்தன, வேறு வீடியோ கான்ஃபரன்ஸிங் சேவைகளைத் தேடும் போது அனைவரின் கண்முன்னே தோன்றியது Google Meet மட்டும் தான். அதைத் தவிர, வேறு எந்த சேவைகளும் யாருக்கும் தெரியவில்லை. மேலும், பல்வேறு  சேவைகள் இணையதளங்களிலும், செயலி வடிவில் கிடைத்தாலும், அவற்றிலும் பிரைவசி தொடர்பான பிரச்சனைகள் இருக்கலாம் என்ற எண்ணம் மக்களிடையே இருந்தது.
மேலும், Zoom வழங்கியது போலப் பல்வேறு வசதிகள் மற்ற APPகளில் இல்லை. இந்நிலையில் FACEBOOK தனது சாட்டிங் செயலியான Messenger-ல் வீடியோ காலிங் வசதிக்கான ஓர் புதிய அப்டேட்டை வழங்கியுள்ளது.facebook
அதன்படி MESSENGER-யை  அப்டேட் செய்த பின் வீடியோ கான்ஃபரன்ஸிங் செய்வதற்கான வசதி செயலியில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தற்போது குறிப்பிட்ட FACEBOOK பயனர்களுக்கே வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த வசதி தரப்பட்டுள்ளதா என நாம் ஆராய்ந்த போது, ஆண்ட்ராய்டு மற்றும் டெஸ்க்டாப் இரண்டிலும் வீடியோ கான்ஃபரன்ஸிங் வசதி தரப்படவில்லை. கூடிய விரைவில் அனைத்துப் பயனர்களுக்கும் இந்தச் சேவை அளிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்தப் புதிய வசதி மூலம் 50 பேர் வரை ஒரு சாட்டிங் ரூமில் இணைத்துக்கொள்ளலாம் என்று  கூறியுள்ளது FACEBOOK.
FACEBOOK  ஏற்கெனவே பிரைவசி சார்ந்த பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளது. இந்நிலையில், Zoom-க்கான மாற்றாக   FACEBOOK இருக்க வேண்டுமென்றால், FACEBOOK அளிக்கும் இந்த வசதியில் பிரைவசி தொடர்பான  பிரச்சனைகள் இருக்கக் கூடாது, இதற்கு FACEBOOK தரப்பிலிருந்து அளிக்கப்பட்ட பதிலில், பயனர்கள் வீடியோ கான்ஃபரன்ஸிங் வசதியைப் பயன்படுத்தும்போது அவை யாவும் கண்காணிக்கப்படாது எனத் தெரிவித்துள்ளனர். மேலும், தற்போது இந்த வசதியில் End-to-End Encryption பாதுகாப்பு அளிக்கப்படவில்லை,  கூடிய விரைவில் அதைக் கொண்டு வருவோம் எனவும் தெரிவித்துள்ளது.

Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here