Home செய்திகள் இந்தியா வாட்ஸ்அப்பின் அப்டேட்டுகளால் போலி செய்திகளைப் பரவுவது 70% வரை குறைந்துள்ளது !

வாட்ஸ்அப்பின் அப்டேட்டுகளால் போலி செய்திகளைப் பரவுவது 70% வரை குறைந்துள்ளது !

427
0
whatsapp
Symbolic photo: whatsApp, Messeger, social networks, silhouettes of people on smartphone in front of logos, logo. | usage worldwide
Share

நாடு முழுவதும் சுமார் 40 கோடி மக்கள் WhatsApp செயலி பயன்படுத்துகின்றனர். மேலும் போலி செய்திகளைப் பரப்பும் ஸ்பேமர்களுக்கு மிகவும் பிடித்த செயலியாகும். சமீபத்தில் கூட, பிரபலமான செய்தி நிறுவனம் போலி செய்திகள் பரவுதலைக் தடுக்க ஒரு புதிய வசதியைக் கொண்டு வந்துள்ளது.

SWIGGY , ZOMATO டெலிவரி பாய்ஸ் உடலின் வெப்பநிலை ! வாடிக்கையாளர்களின் நலன் கருதி புதிய அப்டேட்…

தற்போது கொரோனா வைரஸ் பரவுதலைத் தடுக்க ஊரடங்கு அமல் தொடங்கிய பிறகு போலி செய்திகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே செய்திகளை அனுப்பும் போது வாட்ஸ்அப் சில கட்டுப்பாடுகளை விதித்தது.
அது குறித்து வாட்ஸ் அப் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், வைரல் செய்திகள் பரவுவதைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டுள்ளோம். அனுப்பப்படும் பல செய்திகளைப் பரப்புவதற்கு சில  கட்டுப்பாடுகளை நாங்கள் கொண்டு வந்துள்ளோம். ஒரு செய்தியை ஒரே நேரத்தில் அதிகபட்சம் ஒரு chat-க்கு மட்டும் அனுப்ப முடியும். இந்த புதிய விதிகள் உலகம் முழுக்க அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து போலி செய்திகளின் பரவுதல் 70 சதவீதம் வரை குறைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here