Home செய்திகள் இந்தியா Reliance, FACEBOOK கூட்டணியில் JIOMart ! அத்தியாவசிய தேவைகளை Door டெலிவரி.. 

Reliance, FACEBOOK கூட்டணியில் JIOMart ! அத்தியாவசிய தேவைகளை Door டெலிவரி.. 

492
0
JIO mart
Share

Reliance உடன் FACEBOOK சமீபத்தில் கூட்டணி வைத்தது. அதன் அடிப்படையில் ரூ.43,574 கோடியை முதலீடு செய்வதாக FACEBOOK  தெரிவித்துள்ளது.  தற்போது Reliance  தனது ஆன்லைன் இ-காமர்ஸ் போர்ட்டல் JIOMART-யை தொடங்கியுள்ளது. மும்பையின் சில பகுதிகளில் நேரடியாக Reliance சில்லறை விற்பனை பிரிவு,  உருவாக்கப்பட்டுள்ளது. ஊரடங்கின் காரணமாக, ஜியோமார்ட் அதன் அம்சங்களை பொது மக்களுக்கு அணுகுவதற்காக, வாட்ஸ்அப்  இயங்குதளத்தின் உதவியை எடுக்கிறது.
சேவைகளைச் சோதிக்கத் தொடங்குவதால், Reliance JIOMART  இப்போது Amazon மற்றும் WALLMART, Flipkart-ஐ போட்டியாக வைத்திருக்கும். மேலும் JIOMART கூட்டணி மூலம், வாடிக்கையாளர்களைத்  தொடர்பு கொள்வதற்கு  முக்கிய வழியாக வாட்ஸ்அப் இருக்கும் என பேஸ்புக் நம்புகிறது.JIomart
JIOMART-ன் சேவைகளை விரும்பும் வாடிக்கையாளர்கள் JIOMART -ன்  WhatsApp எண் 8850008000-ஐ தங்கள் மொபைல் தொடர்பில் சேர்க்க வேண்டும். வாடிக்கையாளர்கள் தேவையான பொருளை ஆர்டர் செய்ய JIOMART ஓர் Link அனுப்புகிறது. ஆர்டர் செய்தவுடன், JIOMART அதை வாட்ஸ்அப்பில் ஒரு மளிகைக் கடையுடன் பகிர்ந்து கொள்கிறது.
இதன் பிறகு, JIOMART LITE  வலைத்தளத்தின்படி, வாடிக்கையாளர்களுக்கு ஆர்டர்கள் பற்றிய விவரங்கள்  மற்றும் கடையின் விரிவான விவரங்கள் தரபட்டுகின்றன. தற்போது, Reliance-ன்  அதிகாரப்பூர்வ அறிக்கை அதில் வரவில்லை. மகாராஷ்டிராவின் நவி மும்பை, தானே மற்றும் கல்யாண் பகுதிகளில் பைலட் சோதனையின் அடிப்படையில் இந்த ஆண்டு ஜனவரியில் Reliance சில்லறை விற்பனை JIOMART-யை  அறிமுகப்படுத்தியது.JIO whatsapp
Reliance Jio இயங்குதளம், ரிலையன்ஸ் சில்லறை மற்றும் வாட்ஸ்அப் இடையேயான புதிய கூட்டாண்மை காரணமாக, வாடிக்கையாளர்கள் விரைவில் JioMart-ல் வாட்ஸ்அப்பைப் பயன்படுத்தி பரிவர்த்தனை செய்து “தங்கள் அருகிலுள்ள மளிகைக் கடைகளை எளிதில் அணுகலாம்” என்று Reliance  இண்டஸ்ட்ரீஸ் அறிக்கை கூறுகிறது.

Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here