Home முகப்பு உலக செய்திகள் ஆல்ப்ஸ்  மலைத்தொடரில் ஒளிர்விக்கப்பட்ட இந்தியத் தேசிய கோடி… குவியும் வதந்திகள்!

ஆல்ப்ஸ்  மலைத்தொடரில் ஒளிர்விக்கப்பட்ட இந்தியத் தேசிய கோடி… குவியும் வதந்திகள்!

663
0
flag india
Share

கொரோனா வைரசுக்கு எதிரான போரில் இந்தியர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில், சுவிஸ் நாட்டின் ஆல்ப்ஸ் மலைத்தொடச்சியில் நமது தேசியக்கொடியை ஒளிரவைத்து உள்ளனர்.
உலகிலேயே அதிக அளவிலான மக்கள் தொகையில் இரண்டாவது இடத்தில் இருப்பது இந்தியா.Flag
கொரோனா வைரசுக்கு எதிராக மிகப்பெரிய போரை இந்தியா நடத்தி வருகிறது. இதுவரை இல்லாத அளவிற்கு ஒரு நீண்ட ஊரடங்கு, அமலில் உள்ளது. பொது மக்கள் அனைவரும் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். சுவிஸ் நாட்டில், ஆல்ப்ஸ் என்ற மலைத்தொடரில் 4,478 மீட்டர் உயரத்தில் பிரமிடு வடிவத்தில் அமைந்துள்ள மேட்டர்ஹார்ன் மலையில் அந்நாட்டைச் சேர்ந்த ஒளிகலைஞர் ஜெர்ரி ஹாப்ஸ்டெட்டர் பல்வேறு நாடுகளின் தேசியக்கொடிகளை ஒளிரவிட்டு வருகிறார்.
கடந்த மார்ச் மாதத்திலிருந்து அவர் செய்து வரும் இச் செயல், அந்தந்த நாட்டு மக்கள், கொரோனா வைரஸ் என்ற பேரிருளில் இருந்து மீண்டு வர நம்பிக்கை வெளிச்சம் பாய்ச்சுவதாக உள்ளது.
அது மட்டுமல்ல, கொரோனா வைரசுக்கு எதிரான போரில் ஏராளமான நாடுகளுடன், சுவிஸ் நாட்டின் ஒற்றுமையைக் காட்டுவதாக உள்ளது.
அந்த வரிசையில் இப்போது அந்த ஒளி கலைஞர், மேட்டர்ஹார்ன் மலையில் ஆயிரம் மீட்டர் அளவிலான இந்தியத் தேசியக்கொடியை ஒளிர விட்டிருக்கிறார். அது பார்ப்பதற்கு அத்தனை பரவசமூட்டுவதாக இருக்கிறது.
இதுபற்றி ஜெர்மாட் மேட்டர்ஹார்ன் என்ற சுற்றுலா அமைப்பானது தனது ‘பேஸ்புக்’ புத்தகத்தில் பதிவிட்டிருக்கிறது. அதில் நமது ஒற்றுமையை வெளிப்படுத்தவும், அனைத்து இந்தியர்களுக்கும் நம்பிக்கையை ஊட்டவும், பலத்தை அளிக்கவும் மேட்டர்ஹார்ன் மலையில் இந்திய தேசியக்கொடி ஒளிர விடப்பட்டுள்ளது.
இதனால் சுவிட்சர்லாந்தில் உள்ள இந்தியத் தூதரகம் அமைப்பு, தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளது.modi Tweet
இதில் இந்தியத் தூதரகத்தின் டுவிட்டரில் பிரதமர் மோடி படத்துடன் ‘ரீடுவிட்’ செய்துள்ளார். அதில், “கொரோனா வைரசை எதிர்த்து உலகமே போராடுகிறது. இந்த தொற்று நோயை மனித நேயம் நிச்சயம் வெற்றிகொள்ளும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் இந்த தேசியக்கொடியைப் பறக்க விட்டது காரணம், இந்தியாவிடமிருந்து கொரோனாவுக்கான ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரையைப் பெற்றதால் ஆல்ப்ஸ் மலையில் இந்தியக் கொடியை அலங்கரித்து நன்றி தெரிவித்த சுவிட்சர்லாந்து என்று, ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தவறான
 செய்தியாகும்.
ஏனென்றால் இது வரை இந்தியாவிடம் சுவிட்சர்லாந்து ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரையைக் கேட்டதாக எந்த ஒரு தகவலும் இல்லை. மேலும் நம் நாட்டின் பிரதமர்     ட்வீட்-லும் இது குறித்து எந்த பதிவும் இல்லை. ஆகையால் தவறான செய்தியை நம்ப வேண்டாம்.

Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here