Home செய்திகள் இந்தியா ஊரடங்கு 5.0 மத்திய அரசு அதிரடி அறிவிப்பு ! ஜூன் 10 முதல் ஓட்டல்களுக்கு அனுமதி…

ஊரடங்கு 5.0 மத்திய அரசு அதிரடி அறிவிப்பு ! ஜூன் 10 முதல் ஓட்டல்களுக்கு அனுமதி…

416
0
lock down effort prevent spread corona
Share

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இதுவரை நாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஊரடங்கு  நாளையுடன் முடிவடைகிறது. தற்போது  5-வது கட்டமாக ஊரடங்கு குறித்த சில முக்கிய அறிவிப்புகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்த 6-வது கட்ட பொது முடக்கம் ஜூன் 30-ம்தேதி வரை நீடிக்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
Central Government
அதனைத் தொடர்ந்து பல்வேறு தளர்வுகளும் அளிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூன் 8-ம் தேதி முதல் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து வழிபாட்டுத் தலங்கள், ஓட்டல்கள், உணவகங்கள், ஷாப்பிங் மால்கள் ஆகியவற்றைத் திறந்துகொள்ள முழு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இதில் சுகாதாரத்துறை வகுத்துள்ள எல்லா விதிமுறைகள் கட்டாயம் கடைப்பிடிக்கப்பட வேண்டும். ஆயினும் நோய்ப் பாதிப்பு ஏற்பட்டுள்ள  பகுதிகளில் அனைத்து கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீடிக்கும். Lockdown
பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிலையங்கள், பயிற்சி மையங்கள் போன்ற மாணவர்கள் அதிகம் கூடும் இடங்களை மாநில அரசுகளின் விருப்பப் படி, ஏற்பட்டுள்ள பாதிப்புகளைப் பொறுத்துத் திறந்து கொள்ளலாம். இது குறித்து கல்வி நிலைய நிர்வாகிகள் மற்றும் பெற்றோர்களுடன் கலந்து ஆலோசித்து நடத்த மாநில அரசுகள் ஏற்கனவே கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் ஜூலையில் முடிவு எடுக்க வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
Bus depotசர்வதேச விமானங்கள், மெட்ரோ ரயில், சினிமா திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், நீச்சல் குளங்கள், கேளிக்கை பூங்காக்கள் போன்றவை கொரோனா வைரஸ் பாதிப்பினை பொறுத்து மீண்டும் செயல்பட அனுமதி அளிக்கப்படும்.
அதேபோல் இரவு 9 மணியிலிருந்து அதிகாலை 5 மணி வரையில் எந்த ஒரு தனிநபரும் நடமாடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த குறிப்பிட்ட நேரத்தில் பொதுமக்கள் மிகவும் அவசியத் தேவைக்காக மட்டும் வெளியே செல்லலாம்.
கட்டுப்பாடுகளில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகள் நோய்த் தடுப்பு மண்டலங்களான Containment ஸ்யோனே -களுக்கு முற்றிலும் பொருந்தாது. நோய்த் தடுப்பு மண்டலங்களில் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது மட்டுமே நீட்டிக்கப்படும் அதைத் தவிர எந்த ஒரு தளர்வுகளும் கிடையாது.
ஆனால் இந்த அறிவிப்பில் பேருந்து போக்குவரத்து குறித்து எந்த ஒரு அறிவிப்பும் குறிப்பிடப்படவில்லை. மாநில அரசுகள் ஏதேனும் தளர்த்த வாய்ப்புள்ளதாக மக்களும் போக்குவரத்து ஊழியர்களும் கருதுகின்றனர்.

Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here